Corpus pasurams 2750–2755

This page preserves the source-defined chapter 10 grouping and brings its 6 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 38 · corpus 2750

Pasuram 38

Study resources at Uveda
மற்று இவை தான்
 என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்? *
 மன்னு மலை அரையன் பொன் பாவை * 40

Pasuram 39 · corpus 2751

Pasuram 39

Study resources at Uveda
வாள் நிலா மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும் *
 அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் *
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல *
 தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து * ஆங்கு
 அன்ன அருந் தவத்தின் ஊடு போய் * 41

Pasuram 40 · corpus 2752

Pasuram 40

Study resources at Uveda
ஆயிரம் தோள் மன்னு கரதலங்கள் மட்டித்து *
 மாதிரங்கள் மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் *
 பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப *
 மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும் *
 தன்னின் உடனே சுழலச் சுழன்று ஆடும் *
 கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி *
 அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே? *
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் * 42

Pasuram 41 · corpus 2753

Pasuram 41

Study resources at Uveda
பாவியேற்கு என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் *
 இரும் பொழில் சூழ் மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் *
 பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு *
 என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் * 43

Pasuram 42 · corpus 2754

Pasuram 42

Study resources at Uveda
நோக்குதலும் மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் *
 பன்னு கரதலமும் கண்களும் * பங்கயத்தின் 44

Pasuram 43 · corpus 2755

Pasuram 43

Study resources at Uveda
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல் *
 மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும் *
 மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் *
 துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப *
 மன்னு மரதகக் குன்றின் மருங்கே * ஓர்
 இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான் * 45

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.