Pasuram 60 · corpus 2772
Pasuram 60
தாமரைமேல்
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை *
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை *
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை *
மன்னிய தண் சேறை வள்ளலை 62
Thirumangai Azhwar · Pasurams 60–78
Corpus pasurams 2772–2790
This page preserves the source-defined chapter 17 grouping and brings its 19 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 60 · corpus 2772
தாமரைமேல்
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை *
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை *
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை *
மன்னிய தண் சேறை வள்ளலை 62
Pasuram 61 · corpus 2773
மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி *
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை *
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை *
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை * மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை *
மன்னும் அரங்கத்து எம் மா மணியை * 63
Pasuram 62 · corpus 2774
வல்லவாழ்ப்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை *
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை *
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை *
மன்னும் கடல்மல்லை மாயவனை * 64
Pasuram 63 · corpus 2775
வானவர் தம் சென்னி மணிச் சுடரைத் தண்கால் திறல் வலியை *
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை *
அன்னத்தை மீனை அரியை அரு மறையை *
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை * 65
Pasuram 64 · corpus 2776
கோவலூர் மன்னும் இடைகழி எம் மாயவனை *
பேய் அலறப் பின்னும் முலை உண்ட பிள்ளையை * 66
Pasuram 65 · corpus 2777
அள்ளல்வாய் அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை *
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை * 67
Pasuram 66 · corpus 2778
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை *
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை *
கொல் நவிலும் ஆழிப் படையானை * 68
Pasuram 67 · corpus 2779
கோட்டியூர் அன்ன உருவின் அரியை * திருமெய்யத்து
இன் அமுதவெள்ளத்தை இந்தளூர் அந்தணனை *
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை *
மன்னிய பாடகத்து எம் மைந்தனை * 69
Pasuram 68 · corpus 2780
வெஃகாவில்
உன்னிய யோகத்து உறக்கத்தை * ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை *
என்னை மனம் கவர்ந்த ஈசனை *
வானவர் தம் முன்னவனை 70
Pasuram 69 · corpus 2781
மூழிக்களத்து விளக்கினை *
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை *
நென்னலை இன்றினை நாளையை * நீர்மலைமேல் முன்னவனை 71
Pasuram 70 · corpus 2782
மன்னும் மறை நான்கும் ஆனானை * புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை *
நாங்கூரில் மன்னு மணிமாடக்கோயில் மணாளனை *
நல் நீர்த் தலைச்சங்க நாண்மதியை * நான் வணங்கும்
கண்ணனைக் கண்ணபுரத்தானை * தென் நறையூர்
மன்னு மணிமாடக்கோயில் மணாளனை * 72
Pasuram 71 · corpus 2783
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது *
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் *
தன் அருளும் ஆகமும் தாரானேல் * 73
Pasuram 72 · corpus 2784
தன்னை நான் மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் *
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும் *
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் *
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் * 74
Pasuram 73 · corpus 2785
தான் முன நாள்
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண் *
துன்னு படல் திறந்து புக்கு * 75
Pasuram 74 · corpus 2786
தயிர் வெண்ணெய் தன் வயிறு ஆர விழுங்க *
கொழுங் கயல் கண் மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால் *
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் *
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண் *
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை *
முன் இருந்து முற்றத் தான் துற்றிய தெற்றெனவும் *
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் *
தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் *
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப *
கொல் நவிலும் கூத்தனாய்ப் பெயர்த்தும் குடம் ஆடி *
என் இவன்? என்னப்படுகின்ற ஈடறவும் * 76
Pasuram 75 · corpus 2787
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை *
மன்னன் இராவணன் தன் நல் தங்கை * வாள் எயிற்றுத்
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி *
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் *
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து *
மன்னிய திண்ணெனவும் 77
Pasuram 76 · corpus 2788
வாய்த்த மலை போலும் *
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை * மா முனிக்காத்
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் * 78
Pasuram 77 · corpus 2789
மற்று இவைதான்
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் * 79
Pasuram 78 · corpus 2790
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த *
மன்னிய பூம் பெண்ணை மடல் 80
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.