This neutral reading part groups 7 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ் சுடர்ப்
பரிதி சூடி * அம் சுடர் மதியம் பூண்டு *
பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய் *
திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம் *
கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல் *
பீதக ஆடை முடி பூண் முதலா *
மேதகு பல் கலன் அணிந்து * சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப * மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப *
நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி *
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து *
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் *
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த *
தாமரை உந்தித் தனிப் பெரு நாயக *
மூவுலகு அளந்த சேவடியோயே 1
உலகு படைத்து உண்ட எந்தை * அறை கழல்
சுடர்ப் பூந் தாமரை சூடுதற்கு * அவாவு
ஆர் உயிர் உருகி உக்க * நேரிய
காதல் அன்பில் இன்பு ஈன் தேறல் * அமுத
வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு * ஒரு பொருட்கு
அசைவோர் அசைக * திருவொடு மருவிய
இயற்கை * மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும் *
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? 2
குறிப்பில் கொண்டு நெறிப்பட * உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை *
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வன் ஆகி * சுடர் விளங்கு அகலத்து *
வரை புரை திரை பொரு பெரு வரை வெருவர *
உரும் உரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு
அரசு * உடல் தட வரை சுழற்றிய * தனி மாத்
தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே
இசையுங்கொல் * ஊழிதோறு ஊழி ஓவாதே? 3
ஊழிதோறு ஊழி ஓவாது * வாழிய
என்று யாம் தொழ இசையுங்கொல் *
யாவகை உலகமும் யாவரும் இல்லா *
மேல் வரும் பெரும்பாழ்க் காலத்து * இரும் பொருட்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து * ஒரு தான் ஆகி
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று *
முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி *
மூவுலகம் விளைத்த உந்தி *
மாயக் கடவுள் மா முதல் அடியே? 4
மா முதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி *
மண் முழுதும் அகப்படுத்து * ஒண் சுடர் அடிப் போது
ஒன்று விண் செலீஇ * நான்முகப் புத்தேள் நாடு
வியந்து உவப்ப * வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ * தாமரைக் காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதும் ஆய் *
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன *
கற்பகக் காவு பற்பல அன்ன *
முடி தோள் ஆயிரம் தழைத்த *
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே? 5
நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் *
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா *
யாவகை உலகமும் யாவரும் அகப்பட *
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் *
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க *
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்து * ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது *
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே? 7
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.