Corpus pasurams 2672–2672

This neutral reading part groups 1 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 2672

Pasuram 1

Study resources at Uveda
ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் *
 ஒருமுறை அயனை ஈன்றனை * ஒரு முறை
 இரு சுடர் மீதினில் இயங்கா * மும் மதிள்
 இலங்கை இரு கால் வளைய * ஒரு சிலை
 ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் 5

 அட்டனை * மூவடி நானிலம் வேண்டி *
 முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
 மார்வினின் * இரு பிறப்பு ஒரு மாண் ஆகி *
 ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை *
 நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை 10

 ஏறி * நால் வாய் மும் மதத்து இரு செவி
 ஒரு தனி வேழத்து அரந்தையை * ஒருநாள்
 இரு நீர் மடுவுள் தீர்த்தனை * முத் தீ
 நான்மறை ஐ வகை வேள்வி * அறு தொழில்
 அந்தணர் வணங்கும் தன்மையை * ஐம்புலன் 15

 அகத்தினுள் செறித்து * நான்கு உடன் அடக்கி
 முக் குணத்து இரண்டு அவை அகற்றி * ஒன்றினில்
 ஒன்றி நின்று * ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
 அறியும் தன்மையை * முக் கண் நால் தோள்
 ஐ வாய் அரவோடு * ஆறு பொதி சடையோன் 20

 அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை *
 ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை * கூறிய
 அறு சுவைப் பயனும் ஆயினை * சுடர்விடும்
 ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை * சுந்தர
 நால் தோள் முந்நீர் வண்ண * நின் ஈர் அடி 25

 ஒன்றிய மனத்தால் * ஒரு மதி முகத்து
 மங்கையர் இருவரும் மலர் அன * அங்கையின்
 முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை *
 நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை *
 மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே * 30

 அறுபதம் முரலும் கூந்தல் காரணம் *
 ஏழ் விடை அடங்கச் செற்றனை * அறு வகைச்
 சமயமும் அறிவு அரு நிலையினை * ஐம்பால்
 ஓதியை ஆகத்து இருத்தினை * அறம் முதல்
 நான்கு அவை ஆய் மூர்த்தி மூன்று ஆய் * 35

 இரு வகைப் பயன் ஆய் ஒன்று ஆய் விரிந்து
 நின்றனை * குன்றா மது மலர்ச் சோலை
 வண் கொடிப் படப்பை * வரு புனல் பொன்னி
 மா மணி அலைக்கும் * செந்நெல் ஒண் கழனித்
 திகழ் வனம் உடுத்த * கற்போர் புரிசைக் 40

 கனக மாளிகை * நிமிர் கொடி விசும்பில்
 இளம் பிறை துவக்கும் * செல்வம் மல்கு தென்
 திருக் குடந்தை * அந்தணர் மந்திர மொழியுடன்
 வணங்க * ஆடு அரவு அமளியில் அறிதுயில்
 அமர்ந்த பரம * நின் அடி இணை பணிவன்
 வரும் இடர் அகல மாற்றோ வினையே 45

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.