Corpus pasurams 2182–2191

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 2182

Pasuram 1

Study resources at Uveda
அன்பே தகளியா * ஆர்வமே நெய் ஆக *
 இன்பு உருகு சிந்தை இடு திரியா ** நன்பு உருகி
 ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் * நாரணற்கு *
 ஞானத் தமிழ் புரிந்த நான் 1

Pasuram 2 · corpus 2183

Pasuram 2

Study resources at Uveda
ஞானத்தால் நன்கு உணர்ந்து * நாரணன் தன் நாமங்கள் *
 தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் ** வானத்து
 அணி அமரர் * ஆக்குவிக்கும் அஃது அன்றே * நங்கள்
 பணி அமரர் கோமான் பரிசு 2

Pasuram 3 · corpus 2184

Pasuram 3

Study resources at Uveda
பரிசு நறு மலரால் * பாற்கடலான் பாதம் *
 புரிவார் புகப்பெறுவர் போலாம் ** புரிவார்கள்
 தொல் அமரர் கேள்வித் * துலங்கு ஒளி சேர் தோற்றத்து *
 நல் அமரர் கோமான் நகர் 3

Pasuram 4 · corpus 2185

Pasuram 4

Study resources at Uveda
நகர் இழைத்து நித்திலத்து * நாண் மலர் கொண்டு * ஆங்கே
 திகழும் மணி வயிரம் சேர்த்து ** நிகர் இல்லாப்
 பைங் கமலம் ஏந்திப் * பணிந்தேன் பனி மலராள் *
 அங்கம் வலம் கொண்டான் அடி 4

Pasuram 5 · corpus 2186

Pasuram 5

Study resources at Uveda
அடி மூன்றில் இவ் உலகம் * அன்று அளந்தாய் போலும் *
 அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் ** படி நின்ற
 நீர் ஓத மேனி * நெடுமாலே! * நின் அடியை
 யார் ஓத வல்லார் அறிந்து? 5

Pasuram 6 · corpus 2187

Pasuram 6

Study resources at Uveda
அறிந்து ஐந்தும் உள் அடக்கி * ஆய் மலர் கொண்டு * ஆர்வம்
 செறிந்த மனத்தராய் செவ்வே ** அறிந்து அவன் தன்
 பேர் ஓதி ஏத்தும் * பெருந்தவத்தோர் காண்பரே *
 கார் ஓத வண்ணன் கழல் 6

Pasuram 7 · corpus 2188

Pasuram 7

Study resources at Uveda
கழல் எடுத்து வாய் மடித்துக் * கண் சுழன்று * மாற்றார்
 அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச ** தழல் எடுத்த
 போர் ஆழி ஏந்தினான் * பொன் மலர்ச் சேவடியை *
 ஓர் ஆழி நெஞ்சே! உகந்து 7

Pasuram 8 · corpus 2189

Pasuram 8

Study resources at Uveda
உகந்து உன்னை வாங்கி * ஒளி நிறம் கொள் கொங்கை *
 அகம் குளிர உண் என்றாள் ஆவி ** உகந்து
 முலை உண்பாய் போலே * முனிந்து உண்டாய் * நீயும்
 அலை பண்பால் ஆனமையால் அன்று 8

Pasuram 9 · corpus 2190

Pasuram 9

Study resources at Uveda
அன்று அதுகண்டு அஞ்சாத * ஆய்ச்சி உனக்கு இரங்கி *
 நின்று முலை தந்த இந் நீர்மைக்கு ** அன்று
 வரன்முறையால் நீ அளந்த * மா கடல் சூழ் ஞாலம் *
 பெரு முறையால் எய்துமோ பேர்த்து? 9

Pasuram 10 · corpus 2191

Pasuram 10

Study resources at Uveda
பேர்த்தனை * மா சகடம் பிள்ளையாய் * மண் இரந்து
 காத்தனை * பல் உயிரும் காவலனே ** ஏத்திய
 நா உடையேன் பூ உடையேன் * நின் உள்ளி நின்றமையால் *
 காவடியேன் பட்ட கடை 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.