Corpus pasurams 2192–2201

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 11 · corpus 2192

Pasuram 11

Study resources at Uveda
கடை நின்று அமரர் கழல் தொழுது ** நாளும்
இடை நின்ற * இன்பத்தராவர் ** படை நின்ற
நீரோத மேனி * நெடுமாலே ! * நின் அடியை
யாரோத வல்லார் அவர் ? 11

Pasuram 12 · corpus 2193

Pasuram 12

Study resources at Uveda
அவர் இவர் என்று இல்லை * அரவு அணையான் பாதம் *
 எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் ** பவரும்
 செழும் கதிரோன் ஒண் மலரோன் * கண்ணுதலோன் அன்றே? *
 தொழும் தகையார் நாளும் தொடர்ந்து 12

Pasuram 13 · corpus 2194

Pasuram 13

Study resources at Uveda
தொடர் எடுத்த மால் யானை * சூழ் கயம் புக்கு அஞ்சி *
 படர் எடுத்த பைங் கமலம் கொண்டு ** அன்று இடர் அடுக்க
 ஆழியான் * பாதம் பணிந்து அன்றே? * வானவர் கோன்
 பாழி தான் எய்திற்று பண்டு 13

Pasuram 14 · corpus 2195

Pasuram 14

Study resources at Uveda
பண்டிப் பெரும் பதியை ஆக்கி * பழி பாவம்
 கொண்டு * இங்கு வாழ்வாரைக் கூறாதே ** எண் திசையும்
 பேர்த்த கரம் நான்கு உடையான் * பேர் ஓதி பேதைகாள் *
 தீர்த்தகரர் ஆமின் திரிந்து 14

Pasuram 15 · corpus 2196

Pasuram 15

Study resources at Uveda
திரிந்தது வெம் சமத்துத் * தேர் கடவி * அன்று
 பிரிந்தது * சீதையை மான் பின் போய் ** புரிந்ததுவும்
 கண் பள்ளிகொள்ள * அழகியதே * நாகத்தின்
 தண் பள்ளி கொள்வான் தனக்கு 15

Pasuram 16 · corpus 2197

Pasuram 16

Study resources at Uveda
தனக்கு அடிமை பட்டது * தான் அறியானேலும் *
 மனத்து அடைய வைப்பது ஆம் மாலை ** வனத் திடரை
 ஏரி ஆம் வண்ணம் * இயற்றும் இது அல்லால் *
 மாரி யார் பெய்கிற்பார் மற்று ? 16

Pasuram 17 · corpus 2198

Pasuram 17

Study resources at Uveda
மற்று ஆர் இயல் ஆவர் * வானவர் கோன் மா மலரோன் *
 சுற்றும் வணங்கும் தொழிலானை ** ஒற்றைப்
 பிறை இருந்த * செஞ்சடையான் பின் சென்று * மாலைக்
 குறை இரந்து தான் முடித்தான் கொண்டு 17

Pasuram 18 · corpus 2199

Pasuram 18

Study resources at Uveda
கொண்டது உலகம் * குறள் உருவாய் கோளரியாய் *
 ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது ** உண்டதுவும்
 தான் கடந்த ஏழ் உலகே * தாமரைக்கண் மால் ஒரு நாள் *
 வான் கடந்தான் செய்த வழக்கு 18

Pasuram 19 · corpus 2200

Pasuram 19

Study resources at Uveda
வழக்கு அன்று கண்டாய் * வலி சகடம் செற்றாய் *
 வழக்கு என்று நீ மதிக்க வேண்டா ** குழக் கன்று
 தீ விளவின் காய்க்கு எறிந்த * தீமை திருமாலே! *
 பார் விளங்கச் செய்தாய் பழி 19

Pasuram 20 · corpus 2201

Pasuram 20

Study resources at Uveda
பழி பாவம் கையகற்றிப் * பல் காலும் நின்னை *
 வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ ** வழு இன்றி
 நாரணன் தன் நாமங்கள் * நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் *
 காரணங்கள் தாம் உடையார் தாம் 20

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.