Pasuram 91 · corpus 2272
Pasuram 91
பின்னால் அரு நரகம் * சேராமல் பேதுறுவீர் *
முன்னால் வணங்க முயல்மினோ ** பல் நூல்
அளந்தானைக் * கார்க் கடல் சூழ் ஞாலத்தை * எல்லாம்
அளந்தான் அவன் சேவடி 91
Bhoothath Azhwar · Reading part · pasurams 91–100
Corpus pasurams 2272–2281
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 91 · corpus 2272
பின்னால் அரு நரகம் * சேராமல் பேதுறுவீர் *
முன்னால் வணங்க முயல்மினோ ** பல் நூல்
அளந்தானைக் * கார்க் கடல் சூழ் ஞாலத்தை * எல்லாம்
அளந்தான் அவன் சேவடி 91
Pasuram 92 · corpus 2273
அடியால் முன் கஞ்சனைச் செற்று * அமரர் ஏத்தும்
படியான் * கொடிமேல் புள் கொண்டான் ** நெடியான் தன்
நாமமே * ஏத்துமின்கள் ஏத்தினால் * தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது 92
Pasuram 93 · corpus 2274
கடிது கொடு நரகம் * பிற்காலும் செய்கை *
கொடிது என்று அது கூடா முன்னம் ** வடி சங்கம்
கொண்டானைக் * கூந்தல் வாய் கீண்டானை * கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று 93
Pasuram 94 · corpus 2275
உற்று வணங்கித் தொழுமின் * உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ** பற்றிப்
பொருந்தாதான் மார்பு இடந்து * பூம் பாடகத்துள்
இருந்தானை * ஏத்தும் என் நெஞ்சு 94
Pasuram 95 · corpus 2276
என் நெஞ்சம் மேயான் * என் சென்னியான் * தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் ** முன்னம் சேய்
ஊழியான் * ஊழி பெயர்த்தான் * உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான் 95
Pasuram 96 · corpus 2277
அத்தியூரான் புள்ளை ஊர்வான் * அணி மணியின்
துத்தி சேர் * நாகத்தின்மேல் துயில்வான் ** முத்தீ
மறை ஆவான் * மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் *
இறை ஆவான் எங்கள் பிரான் 96
Pasuram 97 · corpus 2278
எங்கள் பெருமான் * இமையோர் தலைமகன்! நீ *
செங்கண் நெடு மால் திருமார்பா! ** பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் * பாம்பு அணைமேல் சேர்ந்தாய் *
குடமூக்கில் கோயிலாக் கொண்டு 97
Pasuram 98 · corpus 2279
கொண்டு வளர்க்கக் * குழவியாய்த் தான் வளர்ந்தது *
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க ** கொண்டு
குடம் ஆடிக் * கோவலனாய் மேவி * என் நெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை 98
Pasuram 99 · corpus 2280
இறை எம் பெருமான் ! அருள் என்று * இமையோர்
முறை நின்று * மொய்ம் மலர்கள் தூவ ** அறை கழல
சேவடியான் * செங்கண் நெடியான் * குறள் உருவாய்
மாவடிவின் மண் கொண்டான் மால் 99
Pasuram 100 · corpus 2281
மாலே நெடியோனே! கண்ணனே ! * விண்ணவர்க்கு
மேலா! * வியன் துழாய்க் கண்ணியனே ! ** மேலால்
விளவின் காய் * கன்றினால் வீழ்த்தவனே! * என் தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு 100
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.