Pasuram 81 · corpus 2262
Pasuram 81
பகல் கண்டேன் * நாரணனைக் கண்டேன் * கனவில்
மிகக் கண்டேன் * மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன் **
ஊன் திகழும் நேமி * ஒளி திகழும் சேவடியான் *
வான் திகழும் சோதி வடிவு 81
Bhoothath Azhwar · Reading part · pasurams 81–90
Corpus pasurams 2262–2271
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 81 · corpus 2262
பகல் கண்டேன் * நாரணனைக் கண்டேன் * கனவில்
மிகக் கண்டேன் * மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன் **
ஊன் திகழும் நேமி * ஒளி திகழும் சேவடியான் *
வான் திகழும் சோதி வடிவு 81
Pasuram 82 · corpus 2263
வடிக் கோல வாள் நெடுங் கண் * மா மலராள் * செவ்விப்
படிக் கோலம் கண்டு அகலாள் பல்நாள் ** அடிக்கோலி
ஞாலத்தாள் * பின்னும் நலம் புரிந்தது என்கொலோ? *
கோலத்தால் இல்லை குறை 82
Pasuram 83 · corpus 2264
குறையாக வெஞ் சொற்கள் * கூறினேன் கூறி *
மறை ஆங்கு என உரைத்த மாலை ** இறையேனும்
ஈயும்கொல் ! என்றே * இருந்தேன் எனைப் பகலும் *
மாயன்கண் சென்ற வரம் 83
Pasuram 84 · corpus 2265
வரம் கருதி தன்னை * வணங்காத வன்மை *
உரம் கருதி மூர்க்கத்தவனை ** நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட * திருவன் அடி இணையே *
அம் கண் மா ஞாலத்து அமுது 84
Pasuram 85 · corpus 2266
அமுது என்றும் தேன் என்றும் * ஆழியான் என்றும் *
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் ** அமுது அன்ன
சொல் மாலை ஏத்தித் * தொழுதேன் சொலப்பட்ட *
நல் மாலை ஏத்தி நவின்று 85
Pasuram 86 · corpus 2267
நவின்று உரைத்த நாவலர்கள் * நாள் மலர் கொண்டு * ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? ** பயின்றார் தம்
மெய்த் தவத்தால் * காண்பு அரிய மேக மணி வண்ணனை * யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று? 86
Pasuram 87 · corpus 2268
இன்றா அறிகின்றேன் அல்லேன் * இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை ** அன்று
கருக்கோட்டியுள் கிடந்து * கைதொழுதேன் கண்டேன் *
திருக்கோட்டி எந்தை திறம் 87
Pasuram 88 · corpus 2269
திறம்பிற்று இனி அறிந்தேன் * தென் அரங்கத்து எந்தை *
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் ** திறம்பாச்
செடி நரகை நீக்கி * தாம் செல்வதன் முன் * வானோர்
கடி நகர வாசல் கதவு 88
Pasuram 89 · corpus 2270
கதவி கதம் சிறந்த * கஞ்சனை முன் காய்ந்து *
அதவி போர் யானை ஒசித்து ** பதவியாய்ப்
பாணியால் நீர் ஏற்றுப் * பண்டு ஒருகால் மாவலியை *
மாணியாய்க் கொண்டிலையே மண்? 89
Pasuram 90 · corpus 2271
மண்ணுலகம் ஆளேனே ? * வானவர்க்கும் வானவனாய் *
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே? ** நண்ணித்
திருமாலைச் * செங்கண் நெடியானை * எங்கள்
பெருமானைக் கை தொழுத பின் 90
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.