Pasuram 1 · corpus 2282
Pasuram 1
திருக்கண்டேன் * பொன் மேனி கண்டேன் * திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் ** செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் * புரி சங்கம் கைக் கண்டேன் *
என் ஆழி வண்ணன் பால் இன்று 1
Pey Azhwar · Reading part · pasurams 1–10
Corpus pasurams 2282–2291
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1 · corpus 2282
திருக்கண்டேன் * பொன் மேனி கண்டேன் * திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் ** செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் * புரி சங்கம் கைக் கண்டேன் *
என் ஆழி வண்ணன் பால் இன்று 1
Pasuram 2 · corpus 2283
இன்றே கழல் கண்டேன் * ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் *
பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் ** அன்று
திருக் கண்டு கொண்ட * திருமாலே * உன்னை
மருக்கண்டு கொண்ட என் மனம் 2
Pasuram 3 · corpus 2284
மனத்து உள்ளான் * மாகடல் நீர் உள்ளான் * மலராள்
தனத்து உள்ளான் * தண் துழாய் மார்பன் ** சினத்துச்
செருநர் உகச் செற்று உகந்த * தேங்கு ஓத வண்ணன் *
வரு நரகம் தீர்க்கும் மருந்து 3
Pasuram 4 · corpus 2285
மருந்தும் பொருளும் * அமுதமும் தானே *
திருந்திய செங் கண் மால் ஆங்கே ** பொருந்தியும்
நின்று உலகம் உண்டு உமிழ்ந்தும் * நீர் ஏற்றும் மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி 4
Pasuram 5 · corpus 2286
அடி வண்ணம் தாமரை * அன்று உலகம் தாயோன் *
படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் ** முடி வண்ணம்
ஓர் ஆழி வெய்யோன் * ஒளியும் அஃது அன்றே *
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு 5
Pasuram 6 · corpus 2287
அழகு அன்றே ஆழியாற்கு * ஆழி நீர் வண்ணம் *
அழகு அன்றே அண்டம் கடத்தல் ** அழகு அன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு * அலர் மேலோன் கால் கழுவ *
கங்கை நீர் கான்ற கழல் 6
Pasuram 7 · corpus 2288
கழல் தொழுதும் வா நெஞ்சே! * கார்க் கடல் நீர் வேலை *
பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் ** எழில் அளந்து அங்கு
எண்ணற்கு அரியானை * எப் பொருட்கும் சேயானை *
நண்ணற்கு அரியானை நாம் 7
Pasuram 8 · corpus 2289
நாமம் பல சொல்லி * நாராயணா என்று *
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே! வா ** மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த * வண்டு அறையும் தண் துழாய் *
கண்ணனையே காண்க நம் கண் 8
Pasuram 9 · corpus 2290
கண்ணும் கமலம் * கமலமே கைத்தலமும் *
மண் அளந்த பாதமும் மற்று அவையே ** எண்ணில்
கரு மா முகில் வண்ணன் * கார்க் கடல் நீர் வண்ணன் *
திரு மா மணி வண்ணன் தேசு 9
Pasuram 10 · corpus 2291
தேசும் திறலும் * திருவும் உருவமும் *
மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் **
வலம் புரிந்த வான் சங்கம் * கொண்டான் பேர் ஓத *
நலம் புரிந்து சென்று அடையும் நன்கு 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.