Pasuram 11 · corpus 2292
Pasuram 11
நன்கு ஓதும் * நால் வேதத்து உள்ளான் * நறவு இரியும்
பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் ** சங்கு ஓதப்
பாற்கடலான் * பாம்பு அணையின் மேலான் * பயின்று உரைப்பார்
நூல் கடலான் நுண் அறிவினான் 11
Pey Azhwar · Reading part · pasurams 11–20
Corpus pasurams 2292–2301
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 11 · corpus 2292
நன்கு ஓதும் * நால் வேதத்து உள்ளான் * நறவு இரியும்
பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் ** சங்கு ஓதப்
பாற்கடலான் * பாம்பு அணையின் மேலான் * பயின்று உரைப்பார்
நூல் கடலான் நுண் அறிவினான் 11
Pasuram 12 · corpus 2293
அறிவு என்னும் தாள் கொளுவி * ஐம்புலனும் தம்மில் *
செறிவு என்னும் திண் கதவம் செம்மி ** மறை என்றும்
நன்கு ஓதி * நன்கு உணர்வார் காண்பரே * நாள் தோறும்
பைங்கோத வண்ணன் படி 12
Pasuram 13 · corpus 2294
படி வட்டத் தாமரை * பண்டு உலகம் நீர் ஏற்று *
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் **
ஆகாயம் ஊடறுத்து * அண்டம் போய் நீண்டதே *
மா காயமாய் நின்ற மாற்கு 13
Pasuram 14 · corpus 2295
மால்பால் மனம் சுழிப்ப * மங்கையர் தோள் கைவிட்டு *
நூற்பால் மனம் வைக்க நொய்விது ஆம் ** நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் * விண்ணோர் முடி தோயும் *
பாதத்தான் பாதம் பணிந்து 14
Pasuram 15 · corpus 2296
பணிந்து உயர்ந்த பௌவப் * படு திரைகள் மோத *
பணிந்த பண மணிகளாலே அணிந்து ** அங்கு
அனந்தன் அணைக் * கிடக்கும் அம்மான் * அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து 15
Pasuram 16 · corpus 2297
வந்து உதைத்த வெண் திரைகள் * செம் பவள வெண் முத்தம் *
அந்தி விளக்கும் அணி விளக்காம் ** எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் * ஒன்றிய சீர் மார்வன் *
திருவல்லிக்கேணியான் சென்று 16
Pasuram 17 · corpus 2298
சென்ற நாள் செல்லாத * செங்கண் மால் எங்கள் மால் *
என்ற நாள் எந் நாளும் நாள் ஆகும் ** என்றும்
இறவாத எந்தை * இணை அடிக்கே ஆளாய் *
மறவாது வாழ்த்துக என் வாய் 17
Pasuram 18 · corpus 2299
வாய் மொழிந்து வாமனனாய் * மாவலிபால் * மூவடி மண்
நீ அளந்து கொண்ட நெடுமாலே ** தாவிய நின்
எஞ்சா இணை அடிக்கே * ஏழ் பிறப்பும் ஆளாகி *
அஞ்சாது இருக்க அருள் 18
Pasuram 19 · corpus 2300
அருளாது ஒழியுமே ? * ஆல் இலைமேல் * அன்று
தெருளாத * பிள்ளையாய்ச் சேர்ந்தான் ** இருளாத
சிந்தையராய் சேவடிக்கே * செம் மலர் தூய் கைதொழுது *
முந்தையராய் நிற்பார்க்கு முன் 19
Pasuram 20 · corpus 2301
முன் உலகம் * உண்டு உமிழ்தாய்க்கு * அவ்வுலகம் ஈரடியால் *
பின் அளந்து கோடல் பெரிதொன்றே ? ** என்னே!
திருமாலே ! * செங்கண் நெடியானே ! * எங்கள்
பெருமானே ! நீ யிதனைப் பேசு 20
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.