Pasuram 91 · corpus 2372
Pasuram 91
மண் உண்டும் * பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் *
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ** ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட * தான் கட்டுண்டிருந்தான் *
வயிற்றினோடு ஆற்றா மகன் 91
Pey Azhwar · Reading part · pasurams 91–100
Corpus pasurams 2372–2381
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 91 · corpus 2372
மண் உண்டும் * பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் *
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ** ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட * தான் கட்டுண்டிருந்தான் *
வயிற்றினோடு ஆற்றா மகன் 91
Pasuram 92 · corpus 2373
மகன் ஒருவர்க்கு அல்லாத * மா மேனி மாயன் *
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை **
சிறைசெய்த வாணன் தோள் * செற்றான் கழலே *
நிறைசெய்து என் நெஞ்சே! நினை 92
Pasuram 93 · corpus 2374
நினைத்து உலகில் ஆர் தெளிவார்? * நீண்ட திருமால் *
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் ** கனைத்து உலவு
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் * மெள்ளத் துயின்றானை *
உள்ளத்தே வை நெஞ்சமே! உய்த்து 93
Pasuram 94 · corpus 2375
உய்த்து உணர்வு என்னும் * ஒளி கொள் விளக்கு ஏற்றி *
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் ** மெத்தெனவே
நின்றான் இருந்தான் * கிடந்தான் என் நெஞ்சத்து *
பொன்றாமை மாயன் புகுந்து 94
Pasuram 95 · corpus 2376
புகுந்து இலங்கும் * அந்திப் பொழுதத்து * அரியாய்
இகழ்ந்த * இரணியனது ஆகம் ** சுகிர்ந்து எங்கும்
சிந்தப் பிளந்த * திருமால் திருவடியே *
வந்தித்து என் நெஞ்சமே ! வாழ்த்து (95)
Pasuram 96 · corpus 2377
வாழ்த்திய வாயராய் * வானோர் மணி மகுடம் *
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே ** கேழ்த்த
அடித் தாமரை * மலர்மேல் மங்கை மணாளன் *
அடித் தாமரை ஆம் அலர் 96
Pasuram 97 · corpus 2378
அலர் எடுத்த உந்தியான் * ஆங்கு எழில் ஆய *
மலர் எடுத்த மா மேனி மாயன் ** அலர் எடுத்த
வண்ணத்தான் * மா மலரான் வார் சடையான் * என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ? இமை 97
Pasuram 98 · corpus 2379
இமம் சூழ் மலையும் * இரு விசும்பும் காற்றும் *
அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் ** நமன் சூழ்
நரகத்து * நம்மை நணுகாமல் காப்பான் *
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு 98
Pasuram 99 · corpus 2380
தொட்ட படை எட்டும் * தோலாத வென்றியான் *
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று ** குட்டத்துக்
கோள் முதலை துஞ்ச * குறித்து எறிந்த சக்கரத்தான் *
தாள் முதலே நங்கட்குச் சார்வு 99
Pasuram 100 · corpus 2381
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் * தண் துழாய்த்
தார் வாழ் * வரை மார்பன் தான் முயங்கும் ** கார் ஆர்ந்த
வான் அமரும் மின் இமைக்கும் * வண் தாமரை நெடுங் கண் *
தேன் அமரும் பூமேல் திரு 100
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.