Corpus pasurams 2362–2371

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 81 · corpus 2362

Pasuram 81

Study resources at Uveda
நெஞ்சால் * நினைப்பு அரியனேலும் * நிலைப்பெற்று என்
 நெஞ்சமே பேசாய் * நினைக்குங்கால் ** நெஞ்சத்துப்
 பேராது நிற்கும் * பெருமானை என் கொலோ *
 ஓராது நிற்பது உணர்வு 81

Pasuram 82 · corpus 2363

Pasuram 82

Study resources at Uveda
உணரில் உணர்வு அரியன் * உள்ளம் புகுந்து *
 புணரிலும் காண்பு அரியன் உண்மை ** இணர் அணையக்
 கொங்கு அணைந்து வண்டு அறையும் * தண் துழாய்க் கோமானை *
 எங்கு அணைந்து காண்டும் இனி? 82

Pasuram 83 · corpus 2364

Pasuram 83

Study resources at Uveda
இனி அவன் மாயன் * என உரைப்பரேலும் *
 இனி அவன் காண்பு அரியனேலும் ** இனியவன்
 கள்ளத்தால் மண் கொண்டு * விண் கடந்த பைங் கழலான் *
 உள்ளத்தின் உள்ளே உளன் 83

Pasuram 84 · corpus 2365

Pasuram 84

Study resources at Uveda
உளனாய * நான்மறையின் உட்பொருளை * உள்ளத்து
 உளனாகத் * தேர்ந்து உணர்வரேலும் ** உளனாய
 வண் தாமரை நெடுங் கண் * மாயவனை யாவரே? *
 கண்டார் உகப்பர் கவி 84

Pasuram 85 · corpus 2366

Pasuram 85

Study resources at Uveda
கவியினார் கை புனைந்து * கண் ஆர் கழல் போய் *
 செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் ** புவியினார்
 போற்றி உரைக்கப் * பொலியுமே * பின்னைக்கு ஆய்
 ஏற்று உயிரை அட்டான் எழில்? 85

Pasuram 86 · corpus 2367

Pasuram 86

Study resources at Uveda
எழில் கொண்ட * மின்னுக் கொடி எடுத்து * வேகத்
 தொழில்கொண்டு * தான் முழங்கித் தோன்றும் ** எழில்கொண்ட
 நீர் மேகம் அன்ன * நெடு மால் நிறம் போல *
 கார் வானம் காட்டும் கலந்து 86

Pasuram 87 · corpus 2368

Pasuram 87

Study resources at Uveda
கலந்து மணி இமைக்கும் கண்ணா! * நின் மேனி
 மலர்ந்து * மரதகமே காட்டும் ** நலம் திகழும்
 கொந்தின்வாய் வண்டு அறையும் * தண் துழாய்க் கோமானை *
 அந்தி வான் காட்டும் அது 87

Pasuram 88 · corpus 2369

Pasuram 88

Study resources at Uveda
அது நன்று இது தீது என்று * ஐயப்படாதே *
 மது நின்ற தண் துழாய் மார்வன் ** பொது நின்ற *
 பொன் அம் கழலே தொழுமின் * முழு வினைகள்
 முன்னம் கழலும் முடிந்து 88

Pasuram 89 · corpus 2370

Pasuram 89

Study resources at Uveda
முடிந்த பொழுதில் குற வாணர் * ஏனம்
 படிந்து உழு சால் * பைந் தினைகள் வித்த ** தடிந்து எழுந்த
 வேய்ங் கழை போய் * விண் திறக்கும் வேங்கடமே * மேல் ஒரு நாள்
 தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு 89

Pasuram 90 · corpus 2371

Pasuram 90

Study resources at Uveda
சிலம்பும் செறி கழலும் * சென்று இசைப்ப * விண் ஆறு
 அலம்பிய சேவடி போய் ** அண்டம் புலம்பிய தோள்
 எண் திசையும் சூழ * இடம் போதாது என் கொலோ? *
 வண் துழாய் மால் அளந்த மண் 90

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.