Pasuram 1 · corpus 2082
Pasuram 1
வையம் தகளியா * வார் கடலே நெய் ஆக *
வெய்ய கதிரோன் விளக்கு ஆக ** செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே * சூட்டினேன் சொல் மாலை *
இடர் ஆழி நீங்குகவே என்று 1
Poigai Azhwar · Reading part · pasurams 1–10
Corpus pasurams 2082–2091
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1 · corpus 2082
வையம் தகளியா * வார் கடலே நெய் ஆக *
வெய்ய கதிரோன் விளக்கு ஆக ** செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே * சூட்டினேன் சொல் மாலை *
இடர் ஆழி நீங்குகவே என்று 1
Pasuram 2 · corpus 2083
என்று கடல் கடைந்தது? * எவ் உலகம் நீர் ஏற்றது? *
ஒன்றும் அதனை உணரேன் நான் ** அன்று அது
அடைத்து உடைத்துக் * கண்படுத்த ஆழி * இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் 2
Pasuram 3 · corpus 2084
பார் அளவும் ஓர் அடி வைத்து * ஓர் அடியும் பார் உடுத்த *
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே ** சூர் உருவின்
பேய் அளவு கண்ட * பெருமான் அறிகிலேன் *
நீ அளவு கண்ட நெறி 3
Pasuram 4 · corpus 2085
நெறி வாசல் தானேயாய் நின்றானை * ஐந்து
பொறி வாசல் * போர்க் கதவம் சார்த்தி ** அறிவானாம்
ஆல மர நீழல் * அறம் நால்வர்க்கு அன்று உரைத்த *
ஆலம் அமர் கண்டத்து அரன் 4
Pasuram 5 · corpus 2086
அரன் நாரணன் நாமம் * ஆன்விடை புள் ஊர்தி *
உரை நூல் மறை உறையும் கோயில் ** வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு * கையது வேல் நேமி *
உருவம் எரி கார் மேனி ஒன்று 5
Pasuram 6 · corpus 2087
ஒன்றும் மறந்தறியேன் * ஓத நீர் வண்ணனை நான் *
இன்று மறப்பனோ ஏழைகாள்? ** அன்று
கரு அரங்கத்துள் கிடந்து * கைதொழுதேன் கண்டேன் *
திருவரங்கம் மேயான் திசை 6
Pasuram 7 · corpus 2088
திசையும் * திசை உறு தெய்வமும் * தெய்வத்து
இசையும் * கருமங்கள் எல்லாம் ** அசைவு இல் சீர்க்
கண்ணன் நெடு மால் * கடல் கடைந்த * கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு 7
Pasuram 8 · corpus 2089
மயங்க வலம்புரி வாய் வைத்து * வானத்து
இயங்கும் * எறி கதிரோன் தன்னை ** முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது * என் நீ திருமாலே! *
போர் ஆழிக் கையால் பொருது? 8
Pasuram 9 · corpus 2090
பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் * புக்கு இடந்தாய்க்கு * அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே ** விரி தோட்ட
சேவடியை நீட்டித் * திசை நடுங்க விண் துளங்க *
மா வடிவின் நீ அளந்த மண் 9
Pasuram 10 · corpus 2091
மண்ணும் மலையும் * மறி கடலும் மாருதமும் *
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் ** எண்ணில்
அலகு அளவு கண்ட * சீர் ஆழியாய்க்கு * அன்று இவ்
உலகு அளவும் உண்டோ உன் வாய்? 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.