Pasuram 11 · corpus 2092
Pasuram 11
வாய் அவனை அல்லது * வாழ்த்தாது * கை உலகம்
தாயவனை அல்லது * தாம் தொழா ** பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் * உருவொடு பேர் அல்லால் *
காணா கண் கேளா செவி 11
Poigai Azhwar · Reading part · pasurams 11–20
Corpus pasurams 2092–2101
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 11 · corpus 2092
வாய் அவனை அல்லது * வாழ்த்தாது * கை உலகம்
தாயவனை அல்லது * தாம் தொழா ** பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் * உருவொடு பேர் அல்லால் *
காணா கண் கேளா செவி 11
Pasuram 12 · corpus 2093
செவி வாய் கண் மூக்கு * உடல் என்று ஐம்புலனும் * செந்தீ
புவி கால் * நீர் விண் பூதம் ஐந்தும் ** அவியாத
ஞானமும் வேள்வியும் * நல்லறமும் என்பரே *
ஏனமாய் நின்றாற்கு இயல்வு 12
Pasuram 13 · corpus 2094
இயல்வு ஆக * ஈன் துழாயான் அடிக்கே செல்ல *
முயல்வார் இயல் அமரர் முன்னம் ** இயல்வு ஆக
நீதியால் ஓதி * நியமங்களால் பரவ *
ஆதியாய் நின்றார் அவர் 13
Pasuram 14 · corpus 2095
அவர் அவர் தாம் தாம் * அறிந்தவாறு ஏத்தி *
இவர் இவர் எம் பெருமான் என்று ** சுவர் மிசைச்
சார்த்தியும் * வைத்தும் தொழுவர் * உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல் 14
Pasuram 15 · corpus 2096
முதல் ஆவார் மூவரே * அம் மூவருள்ளும்
முதல் ஆவான் * மூரி நீர் வண்ணன் ** முதல் ஆய
நல்லான் அருள் அல்லால் * நாம நீர் வையகத்து *
பல்லார் அருளும் பழுது 15
Pasuram 16 · corpus 2097
பழுதே பல பகலும் * போயின என்று * அஞ்சி
அழுதேன் * அரவு அணைமேல் கண்டு தொழுதேன் **
கடல் ஓதம் கால் அலைப்பக் * கண்வளரும் * செங்கண்
அடல் ஓத வண்ணர் அடி 16
Pasuram 17 · corpus 2098
அடியும் படி கடப்பத் * தோள் திசைமேல் செல்ல *
முடியும் விசும்பு அளந்தது என்பர் ** வடி உகிரால்
ஈர்ந்தான் * இரணியனது ஆகம் * இரும் சிறைப் புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று 17
Pasuram 18 · corpus 2099
நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு * உறி வெண்ணெய்
தோன்ற உண்டான் * வென்றி சூழ் களிற்றை ஊன்றி **
பொருது உடைவு கண்டானும் * புள்ளின்வாய் கீண்டானும் *
மருது இடை போய் மண் அளந்த மால் 18
Pasuram 19 · corpus 2100
மாலும் கருங் கடலே * என் நோற்றாய் * வையகம் உண்டு
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் ** கோலக்
கரு மேனிச் * செங்கண் மால் கண்படையுள் * என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று? 19
Pasuram 20 · corpus 2101
பெற்றார் தளை கழலப் * பேர்ந்து ஓர் குறள் உருவாய் *
செற்றார் படி கடந்த செங்கண் மால் ** நல்
தாமரை மலர்ச் சேவடியை * வானவர் கை கூப்பி *
நிரை மலர் கொண்டு * ஏத்துவரால் நின்று 20
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.