Corpus pasurams 2172–2181

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 91 · corpus 2172

Pasuram 91

Study resources at Uveda
ஊனக் குரம்பையின் * உள் புக்கு இருள் நீக்கி *
 ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ** ஏனத்து
 உருவாய் உலகு இடந்த * ஊழியான் பாதம் *
 மருவாதார்க்கு உண்டாமோ வான்? 91

Pasuram 92 · corpus 2173

Pasuram 92

Study resources at Uveda
வான் ஆகி தீ ஆய் * மறி கடல் ஆய் மாருதம் ஆய் *
 தேன் ஆகி பால் ஆம் திருமாலே! ** ஆன் ஆய்ச்சி
 வெண்ணெய் விழுங்க * நிறையுமே * முன் ஒரு நாள்
 மண்ணை உமிழ்ந்த வயிறு 92

Pasuram 93 · corpus 2174

Pasuram 93

Study resources at Uveda
வயிறு அழல வாள் உருவி * வந்தானை அஞ்ச *
 எயிறு இலக வாய் மடுத்தது என் நீ ? ** பொறி உகிரால்
 பூ வடிவை ஈடு அழித்த * பொன் ஆழிக் கையா ! * நின்
 சேவடிமேல் ஈடு அழிய செற்று 93

Pasuram 94 · corpus 2175

Pasuram 94

Study resources at Uveda
செற்று எழுந்து தீவிழித்து * சென்ற இந்த ஏழுலகும் *
 மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து ** முற்றும்
 மறையவற்குக் காட்டிய * மாயவனை அல்லால் *
 இறையேனும் ஏத்தாது என் நா 94

Pasuram 95 · corpus 2176

Pasuram 95

Study resources at Uveda
நா வாயில் உண்டே * நமோ நாரணா என்று *
 ஓவாது உரைக்கும் உரை உண்டே ** மூவாத
 மாக் கதிக்கண் செல்லும் * வகை உண்டே * என் ஒருவர்
 தீக் கதிக்கண் செல்லும் திறம்? 95

Pasuram 96 · corpus 2177

Pasuram 96

Study resources at Uveda
திறம்பாது என் நெஞ்சமே! * செங்கண் மால் கண்டாய் *
 அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் ** புறம் தான் இம்
 மண் தான் * மறிகடல் தான் மாருதம் தான் * வான் தானே
 கண்டாய் கடைக்கண் பிடி 96

Pasuram 97 · corpus 2178

Pasuram 97

Study resources at Uveda
பிடி சேர் * களிறு அளித்த பேராளா * உன் தன்
 அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே ** பொடி சேர்
 அனற்கு அங்கை ஏற்றான் * அவிர் சடைமேல் பாய்ந்த *
 புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் 97

Pasuram 98 · corpus 2179

Pasuram 98

Study resources at Uveda
பொன் திகழும் மேனிப் * புரி சடை அம் புண்ணியனும் *
 நின்று உலகம் தாய நெடுமாலும் ** என்றும்
 இருவர் அங்கத்தால் * திரிவரேலும் * ஒருவன்
 ஒருவன் அங்கத்து என்றும் உளன் 98

Pasuram 99 · corpus 2180

Pasuram 99

Study resources at Uveda
உளன் கண்டாய் நல் நெஞ்சே * உத்தமன் என்றும்
 உளன் கண்டாய் * உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் **
 வெள்ளத்தின் உள்ளானும் * வேங்கடத்து மேயானும் *
 உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் 99

Pasuram 100 · corpus 2181

Pasuram 100

Study resources at Uveda
ஓர் அடியும் சாடு உதைத்த * ஒண் மலர்ச் சேவடியும் *
 ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ** ஓர் அடியின்
 தாயவனைக் கேசவனைத் * தண் துழாய் மாலை சேர் *
 மாயவனையே மனத்து வை 100

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.