Pasuram 81 · corpus 2162
Pasuram 81
ஆள் அமர் வென்றி * அடு களத்துள் அஞ்ஞான்று *
வாள் அமர் வேண்டி வரை நட்டு * நீள் அரவைச்
சுற்றிக் கடைந்தான் * பெயர் அன்றே ? * தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை 81
Poigai Azhwar · Reading part · pasurams 81–90
Corpus pasurams 2162–2171
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 81 · corpus 2162
ஆள் அமர் வென்றி * அடு களத்துள் அஞ்ஞான்று *
வாள் அமர் வேண்டி வரை நட்டு * நீள் அரவைச்
சுற்றிக் கடைந்தான் * பெயர் அன்றே ? * தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை 81
Pasuram 82 · corpus 2163
படை ஆரும் வாள் கண்ணார் * பாரசி நாள் * பைம் பூந்
தொடையலோடு * ஏந்திய தூபம் ** இடை இடையில்
மீன் மாய * மாசூணும் வேங்கடமே * மேல் ஒரு நாள்
மான் மாய எய்தான் வரை 82
Pasuram 83 · corpus 2164
வரை குடை தோள் காம்பு ஆக * ஆ நிரை காத்து * ஆயர்
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே ! ** உரவு உடைய
நீர் ஆழியுள் கிடந்து * நேரா நிசாசரர் மேல்
பேர் ஆழி கொண்ட பிரான் ! 83
Pasuram 84 · corpus 2165
பிரான் ! உன் பெருமை * பிறர் ஆர் அறிவார்? *
உராய் உலகு அளந்த ஞான்று ** வராகத்து
எயிற்று அளவு * போதாவாறு என்கொலோ? * எந்தை
அடிக்கு அளவு போந்த படி 84
Pasuram 85 · corpus 2166
படி கண்டு அறிதியே? * பாம்பு அணையினான் * புள்
கொடி கண்டு அறிதியே? கூறாய் ** வடிவில்
பொறி ஐந்தும் உள் அடக்கிப் * போதொடு நீர் ஏந்தி *
நெறி நின்ற நெஞ்சமே நீ 85
Pasuram 86 · corpus 2167
நீயும் திருமகளும் நின்றாயால் * குன்று எடுத்துப்
பாயும் * பனி மறுத்த பண்பாளா ** வாசல்
கடை கழியா உள் புகாக் * காமர் பூங் கோவல் *
இடைகழியே பற்றி இனி 86
Pasuram 87 · corpus 2168
இனி யார் புகுவார் * எழு நரக வாசல்? *
முனியாது மூரித் தாள் கோமின் ** கனி சாயக்
கன்று எறிந்த தோளான் * கனை கழலே காண்பதற்கு *
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு 87
Pasuram 88 · corpus 2169
நாடிலும் * நின் அடியே நாடுவன் * நாள்தோறும்
பாடிலும் * நின் புகழே பாடுவன் ** சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் * பொன் அடியே சூடுவேற்கு *
என் ஆகில் என்னே எனக்கு? 88
Pasuram 89 · corpus 2170
எனக்கு ஆவார் * ஆர் ஒருவரே * எம் பெருமான்
தனக்கு ஆவான் * தானே மற்று அல்லால் ** புனக் காயாம்
பூ மேனி காணப் * பொதி அவிழும் பூவைப் பூ *
மா மேனி காட்டும் வரம் 89
Pasuram 90 · corpus 2171
வரத்தால் வலி நினைந்து * மாதவ ! நின் பாதம் *
சிரத்தால் வணங்கானாம் என்றே ? ** உரத்தினால்
ஈர் அரியாய் * நேர் வலியோன் ஆய இரணியனை *
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்? 90
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.