Pasuram 1 · corpus 2382
Pasuram 1
நான்முகனை * நாராயணன் படைத்தான் * நான்முகனும்
தான் முகமாய்ச் * சங்கரனைத் தான் படைத்தான் ** யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு * அறிவித்தேன் ஆழ் பொருளை *
சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து 1
Thirumazhisai Azhwar · Reading part · pasurams 1–10
Corpus pasurams 2382–2391
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1 · corpus 2382
நான்முகனை * நாராயணன் படைத்தான் * நான்முகனும்
தான் முகமாய்ச் * சங்கரனைத் தான் படைத்தான் ** யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு * அறிவித்தேன் ஆழ் பொருளை *
சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து 1
Pasuram 2 · corpus 2383
தேருங்கால் தேவன் * ஒருவனே என்று உரைப்பர் *
ஆரும் அறியார் அவன் பெருமை ** ஓரும்
பொருள் முடிவும் இத்தனையே * எத் தவம் செய்தார்க்கும் *
அருள் முடிவது ஆழியான்பால் 2
Pasuram 3 · corpus 2384
பாலில் கிடந்ததுவும் * பண்டு அரங்கம் மேயதுவும் *
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார்? ** ஞாலத்து
ஒரு பொருளை * வானவர் தம் மெய்ப் பொருளை * அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு (3)
Pasuram 4 · corpus 2385
ஆறு சடைக் கரந்தான் * அண்டர்கோன் தன்னோடும் *
கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே ** வேறு ஒருவர்
இல்லாமை * நின்றானை எம்மானை * எப் பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து (4)
Pasuram 5 · corpus 2386
தொகுத்த வரத்தனாய்த் * தோலாதான் மார்வம் *
வகிர்த்த வளை உகிர்த் தோள் மாலே ** உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி * உள் வாங்கி நீயே *
அரு நான்கும் ஆனாய் அறி 5
Pasuram 6 · corpus 2387
அறியார் சமணர் * அயர்த்தார் பவுத்தர் *
சிறியார் சிவப்பட்டார் செப்பில் ** வெறியாய
மாயவனை மாலவனை * மாதவனை ஏத்தார் *
ஈனவரே ஆதலால் இன்று 6
Pasuram 7 · corpus 2388
இன்று ஆக * நாளையே ஆக * இனிச் சிறிதும்
நின்று ஆக * நின் அருள் என் பாலதே ** நன்றாக
நான் உன்னை * அன்றி இலேன் கண்டாய் * நாரணனே
நீ என்னை அன்றி இலை 7
Pasuram 8 · corpus 2389
இலை துணை மற்று என் நெஞ்சே! * ஈசனை வென்ற *
சிலை கொண்ட செங்கண் மால் சேரா ** குலை கொண்ட
ஈர் ஐந்தலையான் * இலங்கையை ஈடு அழித்த *
கூர் அம்பன் அல்லால் குறை 8
Pasuram 9 · corpus 2390
குறைகொண்டு நான்முகன் * குண்டிகை நீர் பெய்து *
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி ** கறைகொண்ட
கண்டத்தான் * சென்னிமேல் ஏறக் கழுவினான் *
அண்டத்தான் சேவடியை ஆங்கு 9
Pasuram 10 · corpus 2391
ஆங்கு ஆரவாரம் * அது கேட்டு * அழல் உமிழும்
பூங் கார் அரவு அணையான் பொன் மேனி ** யாம் காண
வல்லமே அல்லமே? * மா மலரான் வார் சடையான் *
வல்லரே அல்லரே? வாழ்த்து 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.