Pasuram 11 · corpus 2392
Pasuram 11
வாழ்த்துக வாய் * காண்க கண் கேட்க செவி * மகுடம்
தாழ்த்தி * வணங்குமின்கள் தண் மலரால் ** சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி * என் தொல்லை மால் தன்னை *
வழா வண் கை கூப்பி மதித்து 11
Thirumazhisai Azhwar · Reading part · pasurams 11–20
Corpus pasurams 2392–2401
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 11 · corpus 2392
வாழ்த்துக வாய் * காண்க கண் கேட்க செவி * மகுடம்
தாழ்த்தி * வணங்குமின்கள் தண் மலரால் ** சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி * என் தொல்லை மால் தன்னை *
வழா வண் கை கூப்பி மதித்து 11
Pasuram 12 · corpus 2393
மதித்தாய் போய் நான்கின் * மதியார் போய் வீழ *
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் ** மதித்தாய்
மடுக் கிடந்த * மா முதலை கோள் விடுப்பான் * ஆழி
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு 12
Pasuram 13 · corpus 2394
வீடு ஆக்கும் * பெற்றி அறியாது * மெய் வருத்திக்
கூடு ஆக்கி * நின்று உண்டு கொண்டு உழல்வீர் ** வீடு ஆக்கும்
மெய்ப்பொருள் தான் * வேத முதற்பொருள் தான் * விண்ணவர்க்கு
நற்பொருள் தான் நாராயணன் 13
Pasuram 14 · corpus 2395
நாராயணன் என்னை ஆளி * நரகத்துச்
சேராமல் * காக்கும் திருமால் ** தன் பேரான
பேசப் பெறாத * பிணச் சமயர் பேசக் கேட்டு *
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர் 14
Pasuram 15 · corpus 2396
பல தேவர் ஏத்தப் * படி கடந்தான் பாதம் *
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் **
மார்க்கண்டன் கண்ட வகையே * வரும் கண்டீர் *
நீர்க்கண்டன் கண்ட நிலை 15
Pasuram 16 · corpus 2397
நிலைமன்னும் என் நெஞ்சம் * அந்நான்று * தேவர்
தலை மன்னர் * தாமே மாற்றாக ** பல மன்னர்
போர் மாள * வெம் கதிரோன்மாயப் பொழில் மறைய *
தேர் ஆழியால் மறைத்தாரால் 16
Pasuram 17 · corpus 2398
ஆல நிழற்கீழ் * அற நெறியை * நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் * மெய்த் தவத்தோன் ** ஞாலம்
அளந்தானை * ஆழிக் கிடந்தானை * ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு 17
Pasuram 18 · corpus 2399
மாறு ஆய தானவனை * வள் உகிரால் * மார்வு இரண்டு
கூறாகக் * கீறிய கோளரியை ** வேறாக
ஏத்தி யிருப்பாரை * வெல்லுமே * மற்று அவரைச்
சார்த்தியிருப்பார் தவம் 18
Pasuram 19 · corpus 2400
தவம் செய்து * நான்முகனால் பெற்ற வரத்தை *
அவம் செய்த ஆழியாய் அன்றே ** உவந்து எம்மைக்
காப்பாய் நீ * காப்பதனை ஆவாய் நீ * வைகுந்தம்
ஈப்பாயும் எவ் உயிர்க்கும் நீ 19
Pasuram 20 · corpus 2401
நீயே உலகு எல்லாம் * நின் அருளே நிற்பனவும் *
நீயே தவத் தேவ தேவனும் ** நீயே
எரி சுடரும் மால் வரையும் * எண் திசையும் * அண்டத்து
இரு சுடரும் ஆய இவை 20
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.