Corpus pasurams 2472–2477

This neutral reading part groups 6 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 91 · corpus 2472

Pasuram 91

Study resources at Uveda
தமர் ஆவார் யாவர்க்கும் * தாமரை மேலாற்கும் *
 அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் ** அமரர்கள்
 தாள் தாமரை * மலர்கள் இட்டு இறைஞ்சி * மால் வண்ணன்
 தாள் தாமரை அடைவோம் என்று 91

Pasuram 92 · corpus 2473

Pasuram 92

Study resources at Uveda
என்றும் மறந்தறியேன் * என் நெஞ்சத்தே வைத்து *
 நின்றும் இருந்தும் நெடுமாலை ** என்றும்
 திருவு இருந்த மார்பன் * சிரீதரனுக்கு ஆளாய் *
 கருவு இருந்த நாள் முதலாக் காப்பு (92)

Pasuram 93 · corpus 2474

Pasuram 93

Study resources at Uveda
காப்பு மறந்தறியேன் * கண்ணனே என்று இருப்பன் *
 ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ** ஆக்கை
 கொடுத்து அளித்த ** கோனே! குணப்பரனே! * உன்னை
 விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம் 93

Pasuram 94 · corpus 2475

Pasuram 94

Study resources at Uveda
மெய் தெளிந்தார் என் செய்யார்? * வேறு ஆனார் நீறு ஆக *
 கை தெளிந்து காட்டிக் களப்படுத்து ** பை தெளிந்த
 பாம்பின் அணையாய் ! * அருளாய் அடியேற்கு *
 வேம்பும் கறி ஆகும் ஏன்று 94

Pasuram 95 · corpus 2476

Pasuram 95

Study resources at Uveda
ஏன்றேன் அடிமை * இழிந்தேன் பிறப்பு இடும்பை *
 ஆன்றேன் அமரர்க்கு அமராமை ** ஆன்றேன்
 கடன் நாடும் மண் நாடும் * கைவிட்டு * மேலை
 இடம் நாடு காண இனி 95

Pasuram 96 · corpus 2477

Pasuram 96

Study resources at Uveda
இனி அறிந்தேன் * ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் *
 இனி அறிந்தேன் எம் பெருமான்! உன்னை ** இனி அறிந்தேன்
 காரணன் நீ கற்றவை நீ * கற்பவை நீ * நல் கிரிசை
 நாரணன் நீ * நன்கு அறிந்தேன் நான் 96

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.