Pasuram 81 · corpus 2462
Pasuram 81
கதவு மனம் என்றும் * காணலாம் என்றும் *
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் ** விதை ஆக
நல் தமிழை வித்தி * என் உள்ளத்தை நீ விளைத்தாய் *
கற்ற மொழி ஆகிக் கலந்து 81
Thirumazhisai Azhwar · Reading part · pasurams 81–90
Corpus pasurams 2462–2471
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 81 · corpus 2462
கதவு மனம் என்றும் * காணலாம் என்றும் *
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் ** விதை ஆக
நல் தமிழை வித்தி * என் உள்ளத்தை நீ விளைத்தாய் *
கற்ற மொழி ஆகிக் கலந்து 81
Pasuram 82 · corpus 2463
கலந்தான் என் உள்ளத்துக் * காம வேள் தாதை *
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே? ** அலர்ந்தலர்கள்
இட்டு ஏத்தும் * ஈசனும் நான்முகனும் * என்றிவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து 82
Pasuram 83 · corpus 2464
வேந்தர் ஆய் விண்ணவர் ஆய் * விண் ஆகி தண்ணளி ஆய் *
மாந்தர் ஆய் மாது ஆய் மற்று எல்லாம் ஆய் ** சார்ந்தவர்க்குத்
தன் ஆனால் தான் நேமியான் * மால் வண்ணன் தான் கொடுக்கும் *
பின்னால் தான் செய்யும் பிதிர் 83
Pasuram 84 · corpus 2465
பிதிரும் மனம் இலேன் * பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் * அவன் எனக்கு நேரான் ** அதிரும்
கழல் கால மன்னனையே * கண்ணனையே * நாளும்
தொழக் காதல் பூண்டேன் தொழில் (84)
Pasuram 85 · corpus 2466
தொழில் எனக்குத் * தொல்லை மால் தன் நாமம் ஏத்த *
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் ** கழி சினத்த
வல்லாளன் * வானரக் கோன் வாலி மதன் அழித்த *
வில்லாளன் நெஞ்சத்து உளன் 85
Pasuram 86 · corpus 2467
உளன் கண்டாய் நல் நெஞ்சே! * உத்தமன் என்றும்
உளன் கண்டாய் * உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் **
தன் ஒப்பான் தான் ஆய் * உளன் காண் தமியேற்கு *
என் ஒப்பார்க்கு ஈசன் இமை 86
Pasuram 87 · corpus 2468
இமயப் பெரு மலை போல் * இந்திரனார்க்கு இட்ட *
சமய விருந்து உண்டு ஆர் காப்பார்? ** சமயங்கள்
கண்டான் அவை காப்பான் * கார்க்கண்டன் நான்முகனோடு *
உண்டான் உலகோடு உயிர் 87
Pasuram 88 · corpus 2469
உயிர் கொண்டு உடல் ஒழிய * ஓடும் போது ஓடி *
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி ** செயல் தீரச்
சிந்தித்து * வாழ்வாரே வாழ்வார் * சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது (88)
Pasuram 89 · corpus 2470
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் * பாற்கடலான் பாதம் *
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரை **
கண்டு இறைஞ்சி வாழ்வார் * கலந்த வினை கெடுத்து *
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு 89
Pasuram 90 · corpus 2471
வீற்றிருந்து * விண் ஆள வேண்டுவார் * வேங்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் ** மேல் திருந்த
வாழ்வார் * வரும் மதி பார்த்து அன்பினராய் * மற்று அவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர் 90
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.