Corpus pasurams 504–513

This page preserves the source-defined chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 504

Pasuram 1

Study resources at Uveda
தை ஒரு திங்களும் தரை விளக்கித் *
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் *
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து *
அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா **
உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி *
உன்னையும் உம்பியையும் தொழுதேன் *
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை *
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே (1)

Pasuram 2 · corpus 505

Pasuram 2

Study resources at Uveda
வெள்ளை நுண் மணல்கொண்டு தெரு அணிந்து *
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து *
 முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து *
 முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா ! **
 கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு *
 கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி *
 புள்ளினை வாய் பிளந்தான் எனப்து ஓர் *
 இலக்கினில் புக என்னை எய்கிற்றியே (2)

Pasuram 3 · corpus 506

Pasuram 3

Study resources at Uveda
மத்த நன் நறுமலர் முருக்க மலர் கொண்டு *
முப்போதும் உன் அடி வணங்கி *
 தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து *
 வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே **
 கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு *
 கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி *
 வித்தகன் வேங்கட வாணன் என்னும் *
 விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே (3)

Pasuram 4 · corpus 507

Pasuram 4

Study resources at Uveda
சுவரில் புராண! நின் பேர் எழுதிச் *
சுறவ நற்கொடிக்களும் துரங்கங்களும் *
 கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் *
 காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா **
 அவரைப் பிராயம் தொடங்கி * என்றும்
 ஆதரித்து எழுந்த என் தட முலைகள் *
 துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் *
 தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே (4)

Pasuram 5 · corpus 508

Pasuram 5

Study resources at Uveda
வானிடை வாழும் அவ் வானவர்க்கு *
மறையவர் வேள்வியில் வகுத்த அவி *
 கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து *
 கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப **
 ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று *
 உன்னித்து எழுந்த என் தட முலைகள் *
 மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் *
 வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! (5)

Pasuram 6 · corpus 509

Pasuram 6

Study resources at Uveda
உருவு உடையார் இளையார்கள் நல்லார் *
ஓத்து வல்லார்களைக் கொண்டு * வைகல்
 தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் *
 திருந்தவே நோற்கின்றேன் காமதேவா! **
 கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன் *
 கருவிளை போல் வண்ணன் * கமல வண்ணத் *
 திரு உடை முகத்தினில் திருக்கண்களால் *
 திருந்தவே நோக்கு எனக்கு அருள் கண்டாய் (6)

Pasuram 7 · corpus 510

Pasuram 7

Study resources at Uveda
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து *
கட்டி அரிசி அவல் அமைத்து *
வாய் உடை மறையவர் மந்திரத்தால் *
மன்மதனே ! உன்னை வணங்குகின்றேன் **
தேசம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் *
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் *
சாய் உடை வயிறும் என் தட முலையும் *
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே (7)

Pasuram 8 · corpus 511

Pasuram 8

Study resources at Uveda
மாசு உடை உடம்பொடு தலை உலறி *
வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு *
 தேசு உடைத் திறல் உடைக் காமதேவா! *
 நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் **
 பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் *
 பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம் *
 கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் *
 என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் (8)

Pasuram 9 · corpus 512

Pasuram 9

Study resources at Uveda
தொழுது முப்போதும் உன் அடி வணங்கித் *
தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன் *
 பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே *
 பணிசெய்து வாழப் பெறாவிடில் நான் **
 அழுது அழுது அலமந்து அம்மா வழங்க *
 ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் *
 உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து *
 ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே (9)

Pasuram 10 · corpus 513

Pasuram 10

Study resources at Uveda
கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக் *
கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற *
 மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த *
 மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று **
 பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் *
 புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை *
 விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார் *
 விண்ணவர் கோன் அடி நண்ணுவரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.