This page preserves the source-defined chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற * நாராயணா நரனே * உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால் * எமக்கு வாதை தவிருமே **
காமன் போதரு காலம் என்று * பங்குனி நாள் கடை பாரித்தோம் *
தீமை செய்யும் சிரீதரா ! * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (1)
இன்று முற்றும் முதுகு நோவ * இருந்து இழைத்த இச்சிற்றிலை *
நன்றும் கண் உற நோக்கி * நாம் கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் **
அன்று பாலகன் ஆகி * ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் ! *
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் * இரக்கம் எழாதது எம் பாவமே (2)
குண்டு நீர் உறை கோளரீ ! * மத யானை கோள் விடுத்தாய்! * உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் * கடைக் கண்களால் இட்டு வாதியேல் **
வண்டல் நுண் மணல் தெள்ளி * யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம் *
தெண் திரைக்கடல் பள்ளியாய் * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (3)
பெய்யு மா முகில்போல் வண்ணா * உன்தன் பேச்சும் செய்கையும் * எங்களை
மையல் ஏற்றி மயக்க * உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ? **
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு * உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் *
செய்ய தாமரைக் கண்ணினாய் * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (4)
வெள்ளை நுண் மணல் கொண்டு * சிற்றில் விசித்திரப் பட * வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் * அழித்தியாகிலும் உன் தன் மேல் **
உள்ளம் ஓடி உருகலல்லால் * உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் *
கள்ள மாதவா! கேசவா ! * உன் முகத்தன கண்கள் அல்லவே (5)
முற்று இலாத பிள்ளைகளோம் * முலை போந்திலாதோமை * நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு * நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் ** கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் *
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய சேவகா! * எம்மை வாதியேல் (6)
பேதம் நன்கு அறிவார்களோடு * இவை பேசினால் பெரிது இன் சுவை *
யாதும் ஒன்று அறியாத பிள்ளைக ளோமை * நீ நலிந்து என் பயன்? **
ஓத மா கடல்வண்ணா! * உன் மண வாட்டிமாரொடு சூழறும் *
சேது பந்தம் திருத்தினாய்! * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (7) **
சீதை வாயமுதம் உண்டாய் * எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று *
வீதிவாய் விளையாடும் * ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை **
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் * வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் தன் *
கோதை வாய்த் தமிழ் வல்லவர் * குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே (10)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.