Corpus pasurams 637–646

This page preserves the source-defined chapter 14 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 134 · corpus 637

Pasuram 134

Study resources at Uveda
பட்டி மேய்ந்து ஓர் காரேறு * பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய் *
 இட்டீறு இட்டு விளையாடி * இங்கே போதக் கண்டீரே? **
 இட்டமான பசுக்களை * இனிது மறித்து நீர் ஊட்டி *
 விட்டுக் கொண்டு விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (1)

Pasuram 135 · corpus 638

Pasuram 135

Study resources at Uveda
அனுங்க என்னைப் பிரிவு செய்து * ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் *
 குணுங்கு நாறிக் குட்டேற்றைக் * கோவர்த்தனனைக் கண்டீரே? **
 கணங்களோடு மின் மேகம் * கலந்தால் போல வனமாலை *
 மினுங்க நின்று விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (2)

Pasuram 136 · corpus 639

Pasuram 136

Study resources at Uveda
மாலாய்ப் பிறந்த நம்பியை * மாலே செய்யும் மணாளனை *
 ஏலாப் பொய்கள் உரைப்பானை * இங்கே போதக் கண்டீரே? **
 மேலால் பரந்த வெயில் காப்பான் * வினதை சிறுவன் சிறகு என்னும் *
 மேலாப்பின் கீழ் வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (3)

Pasuram 137 · corpus 640

Pasuram 137

Study resources at Uveda
கார்த் தண் கமலக் கண் என்னும் * நெடுங்கயிறு படுத்தி என்னை *
 ஈர்த்துக் கொண்டு விளையாடும் * ஈசன் தன்னைக் கண்டீரே? **
 போர்த்த முத்தின் குப்பாயப் * புகர் மால் யானைக் கன்றே போல் *
 வேர்த்து நின்று விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (4)

Pasuram 138 · corpus 641

Pasuram 138

Study resources at Uveda
மாதவன் என் மணியினை * வலையில் பிழைத்த பன்றி போல் *
 ஏதும் ஒன்றும் கொளத் தாரா * ஈசன்தன்னைக் கண்டீரே? **
 பீதக ஆடை உடை தாழ * பெருங் கார்மேகக் கன்றே போல் *
 வீதி ஆர வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (5)

Pasuram 139 · corpus 642

Pasuram 139

Study resources at Uveda
தருமம் அறியாக் குறும்பனைத் * தன் கைச் சார்ங்கம் அதுவே போல் *
 புருவ வட்டம் அழகிய * பொருத்தம் இலியைக் கண்டீரே? **
 உருவு கரிதாய் முகம் செய்தாய் * உதயப் பருப்பதத்தின் மேல் *
 விரியும் கதிரே போல்வானை * விருந்தாவனத்தே கண்டோமே (6)

Pasuram 140 · corpus 643

Pasuram 140

Study resources at Uveda
பொருத்தம் உடைய நம்பியைப் * புறம்போல் உள்ளும் கரியானை *
 கருத்தைப் பிழைத்து நின்ற * அக் கரு மா முகிலைக் கண்டீரே? **
 அருத்தித் தாரா கணங்களால் * ஆரப் பெருகு வானம் போல் *
 விருத்தம் பெரிதாய் வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (7)

Pasuram 141 · corpus 644

Pasuram 141

Study resources at Uveda
வெளிய சங்கு ஒன்று உடையானைப் * பீதக ஆடை உடையானை *
 அளி நன்கு உடைய திருமாலை * ஆழியானைக் கண்டீரே? **
 களி வண்டு எங்கும் கலந்தாற்போல் * கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் *
 மிளிர நின்று விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (8)

Pasuram 142 · corpus 645

Pasuram 142

Study resources at Uveda
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த * நளிர் மா மலர் உந்தி *
 வீட்டைப் பண்ணி விளையாடும் * விமலன்தன்னைக் கண்டீரே? **
 காட்டை நாடித் தேனுகனும் * களிறும் புள்ளும் உடன் மடிய *
 வேட்டையாடி வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (9)

Pasuram 143 · corpus 646

Pasuram 143

Study resources at Uveda
பருந்தாள் களிற்றுக்கு அருள்செய்த * பரமன் தன்னைப் பாரின் மேல் *
 விருந்தாவனத்தே கண்டமை * விட்டுசித்தன் கோதை சொல் **
 மருந்தாம் என்று தம் மனத்தே * வைத்துக் கொண்டு வாழ்வார்கள் *
 பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் * பிரியாது என்றும் இருப்பாரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.