Corpus pasurams 627–636

This page preserves the source-defined chapter 13 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 124 · corpus 627

Pasuram 124

Study resources at Uveda
கண்ணன் என்னும் கருந்தெய்வம் * காட்சிப் பழகிக் கிடப்பேனை *
 புண்ணில் புளிப் பெய்தால் போலப் * புறம் நின்று அழகு பேசாதே **
 பெண்ணின் வருத்தம் அறியாத * பெருமான் அரையில் பீதக *
 வண்ண ஆடை கொண்டு * என்னை வாட்டம் தணிய வீசீரே (1)

Pasuram 125 · corpus 628

Pasuram 125

Study resources at Uveda
பால் ஆலிலையில் துயில் கொண்ட * பரமன் வலைப்பட்டு இருந்தேனை *
 வேலால் துன்னம் பெய்தால் போல் * வேண்டிற்று எல்லாம் பேசாதே **
 கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் * குடந்தைக் கிடந்த குடம் ஆடி *
 நீலார் தண்ணந் துழாய் கொண்டு * என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே (2)

Pasuram 126 · corpus 629

Pasuram 126

Study resources at Uveda
கஞ்சைக் காய்ந்த கருவில்லி * கடைக்கண் என்னும் சிறைக்கோலால் *
 நெஞ்சு ஊடுருவ வேவுண்டு * நிலையும் தளர்ந்து நைவேனை **
 அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் * அவன் மார்வு அணிந்த வனமாலை *
 வஞ்சியாதே தருமாகில் * மார்வில் கொணர்ந்து புரட்டீரே (3)

Pasuram 127 · corpus 630

Pasuram 127

Study resources at Uveda
ஆரே உலகத்து ஆற்றுவார்? * ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் *
 காரேறு உழக்க உழக்குண்டு * தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை **
 ஆராவமுதம் அனையான் தன் * அமுத வாயில் ஊறிய *
 நீர்தான் கொணர்ந்து புலராமே * பருக்கி இளைப்பை நீக்கீரே (4)

Pasuram 128 · corpus 631

Pasuram 128

Study resources at Uveda
அழிலும் தொழிலும் உருக் காட்டான் * அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் *
 தழுவி முழுசிப் புகுந்து என்னைச் * சுற்றிச் சுழன்று போகானால் **
 தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே * நெடுமால் ஊதி வருகின்ற *
 குழலின் தொளைவாய் நீர் கொண்டு * குளிர முகத்துத் தடவீரே (5)

Pasuram 129 · corpus 632

Pasuram 129

Study resources at Uveda
நடை ஒன்று இல்லா உலகத்து * நந்தகோபன் மகன் என்னும் *
 கொடிய கடிய திருமாலால் * குளப்புக்கூறு கொளப்பட்டு **
 புடையும் பெயரகில்லேன் நான் * போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில் *
 பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் * போகா உயிர் என் உடம்பையே (6)

Pasuram 130 · corpus 633

Pasuram 130

Study resources at Uveda
வெற்றிக் கருளக் கொடியான்தன் * மீமீது ஆடா உலகத்து *
 வெற்ற வெறிதே பெற்ற தாய் * வேம்பே ஆக வளர்த்தாளே **
 குற்றம் அற்ற முலைதன்னைக் * குமரன் கோலப் பணைத்தோளோடு *
 அற்ற குற்றம் அவை தீர * அணைய அமுக்கிக் கட்டீரே (7)

Pasuram 131 · corpus 634

Pasuram 131

Study resources at Uveda
உள்ளே உருகி நைவேனை * உளளோ இலளோ என்னாத *
 கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் * கோவர்த்தனனைக் கண்டக்கால் **
 கொள்ளும் பயன் ஒன்று இல்லாத * கொங்கை தன்னைக் கிழங்கோடும் *
 அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து * என் அழலைத் தீர்வேனே (8)

Pasuram 132 · corpus 635

Pasuram 132

Study resources at Uveda
கொம்மை முலைகள் இடர் தீரக் * கோவிந்தற்கு ஓர் குற்றேவல் *
 இம்மைப் பிறவி செய்யாதே * இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்? **
 செம்மை உடைய திருமார்வில் * சேர்த்தானேனும் ஒரு ஞான்று *
 மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி * விடைதான் தருமேல் மிக நன்றே (9)

Pasuram 133 · corpus 636

Pasuram 133

Study resources at Uveda
அல்லல் விளைத்த பெருமானை * ஆயர்பாடிக்கு அணி விளக்கை *
 வில்லி புதுவை நகர் நம்பி * விட்டுசித்தன் வியன் கோதை **
 வில்லைத் தொலைத்த புருவத்தாள் * வேட்கை உற்று மிக விரும்பும் *
 சொல்லைத் துதிக்க வல்லார்கள் * துன்பக் கடலுள் துவளாரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.