Corpus pasurams 2713–2714

This page preserves the source-defined chapter 1 grouping and brings its 2 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 2713

Pasuram 1

Study resources at Uveda
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின் *
 சென்னி மணிக் குடுமி தெய்வச் சுடர் நடுவுள் **
 மன்னிய அந்நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல் *
 மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச *
 துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் * 1

Pasuram 2 · corpus 2714

Pasuram 2

Study resources at Uveda
என்னும் விதானத்தின் கீழால் * இரு சுடரை
 மன்னும் விளக்கு ஆக ஏற்றி * மறி கடலும்
 பன்னு திரைக் கவரி வீச *
 நிலமங்கை தன்னை முன நாள் அளவிட்ட
 தாமரை போல் * மன்னிய சேவடியை 2

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.