Pasuram 14 · corpus 2726
Pasuram 14
இரு விசும்பில் மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் *
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல் *
மன்னும் மணி விளக்கை மாட்டி * மழை கண்ணார் 14
Thirumangai Azhwar · Pasurams 14–26
Corpus pasurams 2726–2738
This page preserves the source-defined chapter 5 grouping and brings its 13 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 14 · corpus 2726
இரு விசும்பில் மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் *
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல் *
மன்னும் மணி விளக்கை மாட்டி * மழை கண்ணார் 14
Pasuram 15 · corpus 2727
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் *
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப *
அன்னம் உழக்க நெரிந்து
உக்க வாள் நீலச் * சின்ன நறுந் தாது சூடி * ஓர் மந்தாரம் 15
Pasuram 16 · corpus 2728
துன்னு நறு மலரால் தோள் கொட்டி *
கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர *
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல் *
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த * தாங்கு அரும் சீர் 16
Pasuram 17 · corpus 2729
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல் *
பொன் அரும்பு ஆரம் புலம்ப * அகம் குழைந்து ஆங்கு 17
Pasuram 18 · corpus 2730
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார் *
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் *
இன் அமுதம் மாந்தி இருப்பர் * இது அன்றே 19
Pasuram 19 · corpus 2731
அன்ன அறத்தின் பயன் ஆவது * ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் * காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் 20
Pasuram 20 · corpus 2732
மான் நோக்கின் *
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல் *
மன்னு மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் *
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு * அதனை யாம் தெளியோம்
மன்னும் வட நெறியே வேண்டினோம் * 21
Pasuram 21 · corpus 2733
வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின் *
அன்னது ஓர் தன்மை அறியாதார் * 22
Pasuram 22 · corpus 2734
ஆயன் வேய்
இன் இசை ஓசைக்கு இரங்காதார் * மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் * 23
Pasuram 23 · corpus 2735
பெண்ணைமேல்
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு *
உன்னி உடல் உருகி நையாதார் * 24
Pasuram 24 · corpus 2736
உம்பர்வாய்த்
துன்னு மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில் *
தம் உடலம் வேவத் தளராதார் * 25
Pasuram 25 · corpus 2737
காமவேள்
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய *
பொன் நெடு வீதி புகாதார் * 26
Pasuram 26 · corpus 2738
தம் பூ அணைமேல்
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் *
இன் இளவாடை தடவத் தாம் கண் துயிலும் *
பொன் அனையார் பின்னும் திரு உறுக * 27
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.