Pasuram 10 · corpus 2722
Pasuram 10
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற *
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் *
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப * பொங்கு ஒளி சேர்
கொல் நவிலும் கோள் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர் * 11
Thirumangai Azhwar · Pasurams 10–13
Corpus pasurams 2722–2725
This page preserves the source-defined chapter 4 grouping and brings its 4 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 10 · corpus 2722
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற *
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் *
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப * பொங்கு ஒளி சேர்
கொல் நவிலும் கோள் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர் * 11
Pasuram 11 · corpus 2723
மன்னிய சிங்காசனத்தின்மேல் * வாள் நெடுங் கண்
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து * ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க * மருங்கு இருந்த 11
Pasuram 12 · corpus 2724
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் *
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப *
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் *
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம் *
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை *
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர் *
மன்னிய மா மயில் போல் கூந்தல் * மழைத் தடங் கண் 13
Pasuram 13 · corpus 2725
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து *
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின் *
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த *
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள் *
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று * 14
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.