Corpus pasurams 2585–2594

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 2585

Pasuram 1

Study resources at Uveda
முயற்றி சுமந்து எழுந்து * முந்துற்ற நெஞ்சே *
 இயற்றுவாய் எம்மொடு நீ கூடி ** நயப்பு உடைய
 நா ஈன் தொடைக் கிளவியுள் * பொதிவோம் * நல் பூவைப்
 பூ ஈன்ற வண்ணன் புகழ் 1

Pasuram 2 · corpus 2586

Pasuram 2

Study resources at Uveda
புகழ்வோம் பழிப்போம் * புகழோம் பழியோம் *
 இகழ்வோம் மதிப்போம் * மதியோம் இகழோம் ** மற்று
 எங்கள் மால் செங்கண் மால் * சீறல் நீ தீவினையோம் *
 எங்கள் மால் கண்டாய் இவை 2

Pasuram 3 · corpus 2587

Pasuram 3

Study resources at Uveda
இவை அன்றே நல்ல * இவை அன்றே தீய *
 இவை என்று இவை அறிவனேலும் ** இவை எல்லாம்
 என்னால் அடைப்பு நீக்கு * ஒண்ணாது இறையவனே *
 என்னால் செயற்பாலது என்? 3

Pasuram 4 · corpus 2588

Pasuram 4

Study resources at Uveda
என்னின் மிகு புகழார் யாவரே? * பின்னையும் மற்று
 எண் இல் * மிகு புகழேன் யான் அல்லால் ** என்ன
 கருஞ் சோதிக் * கண்ணன் கடல் புரையும் * சீலப்
 பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று 4

Pasuram 5 · corpus 2589

Pasuram 5

Study resources at Uveda
பெற்ற தாய் நீயே * பிறப்பித்த தந்தை நீ *
 மற்றையார் ஆவாரும் நீ பேசில் ** எற்றேயோ
 மாய மா மாயவளை * மாய முலை வாய் வைத்த *
 நீ அம்மா காட்டும் நெறி? 5

Pasuram 6 · corpus 2590

Pasuram 6

Study resources at Uveda
நெறி காட்டி நீக்குதியோ? * நின்பால் கரு மா
 முறி மேனி காட்டுதியோ? * மேல் நாள் அறியோமை **
 என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே * ஈது உரையாய்
 என் செய்தால் என் படோம் யாம்? 6

Pasuram 7 · corpus 2591

Pasuram 7

Study resources at Uveda
யாமே அருவினையோம் சேயோம் * என் நெஞ்சினார் *
 தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் ** பூ மேய
 செம்மாதை ** நின் மார்வில் சேர்வித்து * பார் இடந்த *
 அம்மா! * நின் பாதத்து அருகு 7

Pasuram 8 · corpus 2592

Pasuram 8

Study resources at Uveda
அருகும் சுவடும் தெரிவு உணரோம் * அன்பே
 பெருகும் மிக இது என்? பேசீர் ** பருகலாம்
 பண்புடையீர் பார் அளந்தீர் பாவியெம் கண் காண்பு அரிய
 நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு 8

Pasuram 9 · corpus 2593

Pasuram 9

Study resources at Uveda
நுமக்கு அடியோம் என்று என்று * நொந்து உரைத்து என்? * மாலார்
 தமக்கு அவர் தாம் * சார்வு அரியர் ஆனால் ** எமக்கு இனி
 யாதானும் * ஆகிடு காண் நெஞ்சே * அவர்திறத்தே
 யாதானும் சிந்தித்து இரு 9

Pasuram 10 · corpus 2594

Pasuram 10

Study resources at Uveda
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் * எட்டோடு
 ஒரு நால்வர் * ஓர் இருவர் அல்லால் ** திருமாற்கு
 யாம் ஆர்? வணக்கம் ஆர்? * ஏ பாவம் நல் நெஞ்சே *
 நாமா மிக உடையோம் நாழ் 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.