Corpus pasurams 2595–2604

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 11 · corpus 2595

Pasuram 11

Study resources at Uveda
நாழால் அமர் முயன்ற * வல் அரக்கன் இன் உயிரை *
 வாழாவகை வலிதல் நின் வலியே? ** ஆழாத
 பாரும் நீ வானும் நீ * காலும் நீ தீயும் நீ *
 நீரும் நீ ஆய் நின்ற நீ 11

Pasuram 12 · corpus 2596

Pasuram 12

Study resources at Uveda
நீ அன்றே ஆழ் துயரில் * வீழ்விப்பான் நின்று உழன்றாய் *
 போய் ஒன்று சொல்லி என்? போ நெஞ்சே ** நீ என்றும்
 காழ்த்து உபதேசம் தரினும் * கைக்கொள்ளாய் * கண்ணன்தாள்
 வாழ்த்துவதே கண்டாய் வழக்கு 12

Pasuram 13 · corpus 2597

Pasuram 13

Study resources at Uveda
வழக்கொடு மாறுகோள் அன்று * அடியார் வேண்ட *
 இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே? **
 எம் ஆட்கொண்டு ஆகிலும் * யான் வேண்ட என் கண்கள் *
 தம்மால் காட்டு உன் மேனிச் சாய் 13

Pasuram 14 · corpus 2598

Pasuram 14

Study resources at Uveda
சாயால் கரியானை * உள் அறியாராய் நெஞ்சே *
 பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் ** நீ யார்? போய்த்
 தேம்பு ஊண் சுவைத்து * ஊன் அறிந்து அறிந்தும் * தீவினை ஆம்
 பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்தி 14

Pasuram 15 · corpus 2599

Pasuram 15

Study resources at Uveda
பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே * படு துயரம்
 பேர்த்து ஓதப் * பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ** ஆர்த்து ஓதம்
 தம் மேனித் * தாள் தடவ தாம் கிடந்து * தம்முடைய
 செம்மேனிக் கண்வளர்வார் சீர் 15

Pasuram 16 · corpus 2600

Pasuram 16

Study resources at Uveda
சீரால் பிறந்து * சிறப்பால் வளராது *
 பேர் வாமன் ஆகாக்கால் பேராளா ** மார்பு ஆரப்
 புல்கி நீ உண்டு உமிழ்ந்த * பூமி நீர் ஏற்பு அரிதே? *
 சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து 16

Pasuram 17 · corpus 2601

Pasuram 17

Study resources at Uveda
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் * தோன்றாது விட்டாலும் *
 வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய்திறவார் ** சூழ்ந்து எங்கும்
 வாள் வரைகள் போல் அரக்கன் * வன் தலைகள் தாம் இடிய *
 தாள் வரை வில் ஏந்தினார் தாம் 17

Pasuram 18 · corpus 2602

Pasuram 18

Study resources at Uveda
தாம்பால் ஆப்புண்டாலும் * அத் தழும்பு தான் இளக *
 பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் ** சோம்பாது இப்
 பல் உருவை எல்லாம் * படர்வித்த வித்தா * உன்
 தொல் உருவை யார் அறிவார்? சொல்லு 18

Pasuram 19 · corpus 2603

Pasuram 19

Study resources at Uveda
சொல்லில் குறை இல்லை * சூது அறியா நெஞ்சமே *
 எல்லி பகல் என்னாது எப்போதும் ** தொல்லைக்கண்
 மாத் தானைக்கு எல்லாம் * ஓர் ஐவரையே மாறு ஆக *
 காத்தானைக் காண்டும் நீ காண் 19

Pasuram 20 · corpus 2604

Pasuram 20

Study resources at Uveda
காணப்புகில் அறிவு * கைக்கொண்ட நல் நெஞ்சம் *
 நாணப்படும் அன்றே நாம் பேசில்! ** மாணி
 உரு ஆகிக்கொண்டு * உலகம் நீர் ஏற்ற சீரான் *
 திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று 20

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.