Pasuram 81 · corpus 2665
Pasuram 81
பகல் இரா என்பதுவும் * பாவியாது * எம்மை
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் ** தகவாத்
தொழும்பர் இவர் சீர்க்கும் * துணை இலர் என்று ஓரார் *
செழும் பரவை மேயார் தெரிந்து 81
Nammazhvar · Reading part · pasurams 81–87
Corpus pasurams 2665–2671
This neutral reading part groups 7 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 81 · corpus 2665
பகல் இரா என்பதுவும் * பாவியாது * எம்மை
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் ** தகவாத்
தொழும்பர் இவர் சீர்க்கும் * துணை இலர் என்று ஓரார் *
செழும் பரவை மேயார் தெரிந்து 81
Pasuram 82 · corpus 2666
தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் * தீவினையேன் * வாளா
இருந்தொழிந்தேன் * கீழ் நாள்கள் எல்லாம் ** கரந்துருவின்
அம் மானை * அந்நான்று பின் தொடர்ந்த * ஆழி அங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து 82
Pasuram 83 · corpus 2667
அயர்ப்பாய் அயராப்பாய் * நெஞ்சமே சொன்னேன் *
உயப்போம் நெறி இதுவே கண்டாய் ** செயற்பால
அல்லவே செய்கிறுதி * நெஞ்சமே அஞ்சினேன் *
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து 83
Pasuram 84 · corpus 2668
வாழ்த்தி அவன் அடியைப் * பூப் புனைந்து * நின் தலையைத்
தாழ்த்து * இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி **
எங்கு உற்றாய் என்று அவனை * ஏத்தாது என் நெஞ்சமே *
தங்கத்தான் ஆமேலும் தங்கு 84
Pasuram 85 · corpus 2669
தங்கா முயற்றிய ஆய்த் * தாழ் விசும்பின் மீது பாய்ந்து *
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டனகொல் ** பொங்கு ஓதத்
தண் அம் பால் * வேலைவாய்க் கண்வளரும் * என்னுடைய
கண்ணன்பால் நல் நிறம் கொள் கார்? 85
Pasuram 86 · corpus 2670
கார் கலந்த மேனியான் * கை கலந்த ஆழியான் *
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் ** சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் * சூழ்வினையின் ஆழ் துயரை *
என் நினைந்து போக்குவர் இப்போது? 86
Pasuram 87 · corpus 2671
இப்போதும் இன்னும் * இனிச் சிறிது நின்றாலும் *
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே ** எப்போதும்
கை கழலா நேமியான் * நம்மேல் வினை கடிவான் *
மொய் கழலே ஏத்த முயல் 87
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.