Corpus pasurams 2655–2664

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 71 · corpus 2655

Pasuram 71

Study resources at Uveda
இனி நின்று நின் பெருமை * யான் உரைப்பது என்னே? *
 தனி நின்ற சார்வு இலா மூர்த்தி ** பனி நீர்
 அகத்து உலவு * செஞ்சடையான் ஆகத்தான் * நான்கு
 முகத்தான் நின் உந்தி முதல் 71

Pasuram 72 · corpus 2656

Pasuram 72

Study resources at Uveda
முதல் ஆம் திரு உருவம் மூன்று என்பர் * ஒன்றே
 முதல் ஆகும் * மூன்றுக்கும் என்பர் ** முதல்வா
 நிகர் இலகு கார் உருவா * நின் அகத்தது அன்றே *
 புகர் இலகு தாமரையின் பூ? 72

Pasuram 73 · corpus 2657

Pasuram 73

Study resources at Uveda
பூவையும் காயாவும் * நீலமும் பூக்கின்ற *
 காவி மலர் என்றும் காண்தோறும் ** பாவியேன்
 மெல் ஆவி * மெய் மிகவே பூரிக்கும் * அவ்வவை
 எல்லாம் பிரான் உருவே என்று 73

Pasuram 74 · corpus 2658

Pasuram 74

Study resources at Uveda
என்றும் ஒருநாள் * ஒழியாமை யான் இரந்தால் *
 ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் ** குன்று
 குடை ஆக * ஆ காத்த கோவலனார் * நெஞ்சே
 புடை தான் பெரிதே புவி 74

Pasuram 75 · corpus 2659

Pasuram 75

Study resources at Uveda
புவியும் இரு விசும்பும் நின் அகத்த * நீ என்
 செவியின் வழி புகுந்து * என் உள்ளாய் ** அவிவு இன்றி
 யான் பெரியன் நீ பெரியை * என்பதனை யார் அறிவார்? *
 ஊன் பருகு நேமியாய் உள்ளு 75

Pasuram 76 · corpus 2660

Pasuram 76

Study resources at Uveda
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் * வினைப் படலம் *
 விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் ** உள்ள
 உலகு அளவும் யானும் * உளன் ஆவன் என்கொலோ? *
 உலகு அளந்த மூர்த்தி உரை 76

Pasuram 77 · corpus 2661

Pasuram 77

Study resources at Uveda
உரைக்கில் ஓர் சுற்றத்தார் * உற்றார் என்று ஆரே? *
 இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் ** உரைப்பு எல்லாம்
 நின் அன்றி * மற்று இலேன் கண்டாய் * எனது உயிர்க்கு ஓர்
 சொல் நன்றி ஆகும் துணை 77

Pasuram 78 · corpus 2662

Pasuram 78

Study resources at Uveda
துணை நாள் பெருங் கிளையும் * தொல் குலமும் * சுற்றத்து
 இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் ** கணை நாணில்
 ஓவாத் தொழில் சார்ங்கன் * தொல் சீரை நல் நெஞ்சே *
 ஓவாத ஊணாக உண் 78

Pasuram 79 · corpus 2663

Pasuram 79

Study resources at Uveda
உள் நாட்டுத் தேசு அன்றே? * ஊழ்வினையை அஞ்சுமே? *
 விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே? ** மண் நாட்டில்
 ஆர் ஆகி * எவ் இழிவிற்று ஆனாலும் * ஆழி அங்கைப்
 பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு 79

Pasuram 80 · corpus 2664

Pasuram 80

Study resources at Uveda
பிறப்பு இறப்பு மூப்புப் * பிணி துறந்து * பின்னும்
 இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் ** மறப்பு எல்லாம்
 ஏதமே * என்று அல்லால் எண்ணுவனே * மண் அளந்தான்
 பாதமே ஏத்தாப் பகல்? 80

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.