Corpus pasurams 948–957

This page preserves the source-defined decade 1, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 948

Pasuram 1

Study resources at Uveda
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் * பெருந் துயர் இடும்பையில் பிறந்து *
 கூடினேன் கூடி இளையவர் தம்மோடு * அவர் தரும் கலவியே கருதி **
 ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் * உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து *
 நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம் (1) **

Pasuram 2 · corpus 949

Pasuram 2

Study resources at Uveda
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி * அவர் அவர் பணை முலை துணையா *
பாவியேன் உணராது எத்தனை பகலும் * பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் **
தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும் * சூழ் புனல் குடந்தையே தொழுது *
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம் (2)

Pasuram 3 · corpus 950

Pasuram 3

Study resources at Uveda
சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் * தெரிவைமார் உருவமே மருவி *
 ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் * ஒழிந்தன கழிந்த அந் நாள்கள் **
 காமனார் தாதை நம்முடை அடிகள் * தம் அடைந்தார் மனத்து இருப்பார் *
 நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம் (3)

Pasuram 4 · corpus 951

Pasuram 4

Study resources at Uveda
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி * வேல்கணார் கலவியே கருதி *
 நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் * என் செய்கேன்? நெடு விசும்பு அணவும் **
 பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட * பாழியான் ஆழியான் அருளே *
 நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம்(4)

Pasuram 5 · corpus 952

Pasuram 5

Study resources at Uveda
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் * கண்டவா திரிதந்தேனேலும் *
 தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் * சிக்கெனத் திருவருள் பெற்றேன் **
 உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் * உடம்பு எலாம் கண்ண நீர் சோர *
 நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன் * நாராயணா என்னும் நாமம்(5)

Pasuram 6 · corpus 953

Pasuram 6

Study resources at Uveda
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் * எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் *
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி * அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் **
வம்பு உலாம் சோலை மா மதிள் * தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி *
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம் (6)

Pasuram 7 · corpus 954

Pasuram 7

Study resources at Uveda
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் * இன்னது ஓர் தன்மை என்று உணரீர் *
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் * கண்டவா தொண்டரைப் பாடும் **
 சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் * சூழ் புனல் குடந்தையே தொழுமின் *
 நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் * நாராயணா என்னும் நாமம்(7)

Pasuram 8 · corpus 955

Pasuram 8

Study resources at Uveda
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் * கருத்துளே திருத்தினேன் மனத்தை *
 பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை * பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம் **
 செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன் * செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி *
 நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன் * நாராயணா என்னும் நாமம்(8)

Pasuram 9 · corpus 956

Pasuram 9

Study resources at Uveda
குலம் தரும் செல்வம் தந்திடும் * அடியார் படு துயர் ஆயின எல்லாம் *
 நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் * அருளொடு பெரு நிலம் அளிக்கும் **
 வலம் தரும் மற்றும் தந்திடும் * பெற்ற தாயினும் ஆயின செய்யும் *
 நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம்(9)

Pasuram 10 · corpus 957

Pasuram 10

Study resources at Uveda
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் * மங்கையார் வாள் கலிகன்றி *
 செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை * இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்! **
 துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின் * துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் *
 நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு * நாராயணா என்னும் நாமம்(10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.