Corpus pasurams 958–967

This page preserves the source-defined decade 1, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 11 · corpus 958

Pasuram 11

Study resources at Uveda
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட * வரி சிலை வளைவித்து * அன்று
 ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற * இருந்த நல் இமயத்துள் **
 ஆலி மா முகில் அதிர்தர அரு வரை * அகடு உற முகடு ஏறி *
 பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப் * பிரிதி சென்று அடை நெஞ்சே!(1)

Pasuram 12 · corpus 959

Pasuram 12

Study resources at Uveda
கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய்ய * அரு வரை அணை கட்டி *
 இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம் * இருந்த நல் இமயத்து **
 விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன * வேழங்கள் துயர்கூர *
 பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு * பிரிதி சென்று அடை நெஞ்சே!(2)

Pasuram 13 · corpus 960

Pasuram 13

Study resources at Uveda
துடி கொள் நுண் இடைச் சுரி குழல் * துளங்கு எயிற்று இளங்கொடி திறத்து * ஆயர்
 இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் * இருந்த நல் இமயத்து **
 கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் * மணி அறைமிசை வேழம் *
 பிடியினோடு வண்டு இசை சொலத் துயில்கொளும் * பிரிதி சென்று அடை நெஞ்சே!(3)

Pasuram 14 · corpus 961

Pasuram 14

Study resources at Uveda
மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர * ஒருவனது அகல் மார்வம்
 திறந்து * வானவர் மணி முடி பணிதர * இருந்த நல் இமயத்துள் **
 இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக் * கிடந்து அருகு எரி வீசும் *
 பிறங்கு மா மணி அருவியொடு இழிதரு * பிரிதி சென்று அடை நெஞ்சே! (4)

Pasuram 15 · corpus 962

Pasuram 15

Study resources at Uveda
கரை செய் மாக் கடல் கிடந்தவன் * கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த *
 அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும் * அமர்ந்த நல் இமயத்து **
 வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை * அளை மிகு தேன் தோய்த்து *
 பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் * பிரிதி சென்று அடை நெஞ்சே! (5)

Pasuram 16 · corpus 963

Pasuram 16

Study resources at Uveda
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் * பள்ளிகொள் பரமா! என்று *
 இணங்கி வானவர் மணி முடி பணிதர * இருந்த நல் இமயத்து **
 மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற * நிமிர்ந்து அவை முகில் பற்றி *
 பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் * பிரிதி சென்று அடை நெஞ்சே! (6)

Pasuram 17 · corpus 964

Pasuram 17

Study resources at Uveda
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய * கறி வளர் கொடி துன்னி *
 போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய * பூம் பொழில் இமயத்துள் **
 ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து * இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் *
 பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும் * பிரிதி சென்று அடை நெஞ்சே! (7)

Pasuram 18 · corpus 965

Pasuram 18

Study resources at Uveda
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை * இரும் பசி அது கூர *
 அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய * அருவரை இமயத்து **
 பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று * எண்ணி நின்று இமையோர்கள் *
 பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப் * பிரிதி சென்று அடை நெஞ்சே! (8)

Pasuram 19 · corpus 966

Pasuram 19

Study resources at Uveda
ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு * உறு துயர் அடையாமல் *
 ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை * இருந்த நல் இமயத்து **
 தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற * தழல் புரை எழில் நோக்கி *
 பேதை வண்டுகள் எரி என வெருவரு * பிரிதி சென்று அடை நெஞ்சே! (9)

Pasuram 20 · corpus 967

Pasuram 20

Study resources at Uveda
கரிய மா முகில் படலங்கள் கிடந்து * அவை முழங்கிட * களிறு என்று
 பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு * பிரிதி எம் பெருமானை **
 வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் * கலியனது ஒலி மாலை *
 அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு * அரு வினை அடையாவே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.