Pasuram 901 · corpus 1848
Pasuram 901
ஒரு நல் சுற்றம் * எனக்கு உயிர் ஒண் பொருள் *
வரும் நல் தொல் கதி * ஆகிய மைந்தனை **
நெருநல் கண்டது * நீர்மலை இன்று போய் *
கரு நெல் சூழ் * கண்ணமங்கையுள் காண்டுமே 1
Thirumangai Azhwar · Pasurams 901–910
Corpus pasurams 1848–1857
This page preserves the source-defined decade 10, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 901 · corpus 1848
ஒரு நல் சுற்றம் * எனக்கு உயிர் ஒண் பொருள் *
வரும் நல் தொல் கதி * ஆகிய மைந்தனை **
நெருநல் கண்டது * நீர்மலை இன்று போய் *
கரு நெல் சூழ் * கண்ணமங்கையுள் காண்டுமே 1
Pasuram 902 · corpus 1849
பொன்னை மா மணியை * அணி ஆர்ந்தது ஓர்
மின்னை * வேங்கடத்து உச்சியில் கண்டு போய் **
என்னை ஆளுடை ஈசனை * எம்பிரான்
தன்னை * யாம் சென்று காண்டும் * தண்காவிலே 2
Pasuram 903 · corpus 1850
வேலை ஆல் இலைப் * பள்ளி விரும்பிய *
பாலை ஆர் அமுதத்தினைப் * பைந் துழாய் **
மாலை ஆலியில் * கண்டு மகிழ்ந்து போய் *
ஞாலம் உன்னியைக் காண்டும் * நாங்கூரிலே 3
Pasuram 904 · corpus 1851
துளக்கம் இல் சுடரை * அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் * பேரில் வணங்கிப் போய் **
அளப்பு இல் ஆர் அமுதை * அமரர்க்கு அருள்
விளக்கினை * சென்று வெள்ளறைக் காண்டுமே 4
Pasuram 905 · corpus 1852
சுடலையில் * சுடு நீறன் அமர்ந்தது ஓர் *
நடலை தீர்த்தவனை * நறையூர்க் கண்டு ** என்
உடலையுள் புகுந்து * உள்ளம் உருக்கி உண் *
விடலையைச் சென்று காண்டும் * மெய்யத்துள்ளே 5
Pasuram 906 · corpus 1853
வானை ஆர் அமுதம் * தந்த வள்ளலை *
தேனை நீள் வயல் * சேறையில் கண்டு போய் **
ஆனை வாட்டி அருளும் * அமரர் தம்
கோனை * யாம் குடந்தைச் சென்று காண்டுமே 6
Pasuram 907 · corpus 1854
கூந்தலார் மகிழ் * கோவலன் ஆய் * வெண்ணெய்
மாந்து அழுந்தையில் * கண்டு மகிழ்ந்து போய் **
பாந்தள் பாழியில் * பள்ளி விரும்பிய *
வேந்தனைச் சென்று காண்டும் * வெஃகாவுளே 7
Pasuram 908 · corpus 1855
பத்தர் ஆவியைப் * பால் மதியை * அணித்
தொத்தை * மாலிருஞ்சோலைத் தொழுது போய் **
முத்தினை மணியை * மணி மாணிக்க
வித்தினை * சென்று விண்ணகர்க் காண்டுமே 8
Pasuram 909 · corpus 1856
கம்ப மா களிறு * அஞ்சிக் கலங்க * ஓர்
கொம்பு கொண்ட * குரை கழல் கூத்தனை **
கொம்பு உலாம் பொழில் * கோட்டியூர்க் கண்டு போய் *
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே 9
Pasuram 910 · corpus 1857
பெற்ற மாளியைப் * பேரில் மணாளனை *
கற்ற நூல் * கலிகன்றி உரைசெய்த **
சொல் திறம் * இவை சொல்லிய தொண்டர்கட்கு *
அற்றம் இல்லை * அண்டம் அவர்க்கு ஆட்சியே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.