Corpus pasurams 1838–1847

This page preserves the source-defined decade 9, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 891 · corpus 1838

Pasuram 891

Study resources at Uveda
எங்கள் எம் இறை எம் பிரான் * இமையோர்க்கு நாயகன் * ஏத்து அடியவர்
தங்கள் தம் மனத்துப் * பிரியாது அருள் புரிவான் **
பொங்கு தண் அருவி புதம் செய்யப் * பொன்களே சிதற இலங்கு ஒளி *
செங்கமலம் மலரும் * திருக்கோட்டியூரானே 1

Pasuram 892 · corpus 1839

Pasuram 892

Study resources at Uveda
எவ்வ நோய் தவிர்ப்பான் * எமக்கு இறை இன் நகைத் துவர் வாய் * நில மகள்
செவ்வி தோய வல்லான் * திரு மா மகட்கு இனியான் **
மௌவல் மாலை வண்டு ஆடும் * மல்லிகை மாலையோடும் அணைந்து * மாருதம்
தெய்வம் நாற வரும் * திருக்கோட்டியூரானே 2

Pasuram 893 · corpus 1840

Pasuram 893

Study resources at Uveda
வெள்ளியான் கரியான் * மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை * எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் * உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் **
துள்ளு நீர் மொண்டு கொண்டு * சாமரைக் கற்றைச் சந்தனம் உந்தி வந்து அசை *
தெள்ளு நீர்ப் புறவில் * திருக்கோட்டியூரானே 3

Pasuram 894 · corpus 1841

Pasuram 894

Study resources at Uveda
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் * ஈசற்கு இசைந்து * உடம்பில் ஓர்
கூறு தான் கொடுத்தான் * குல மா மகட்கு இனியான் **
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி * இன் இள வண்டு * நல் நறும்
தேறல் வாய்மடுக்கும் * திருக்கோட்டியூரானே 4

Pasuram 895 · corpus 1842

Pasuram 895

Study resources at Uveda
வங்க மா கடல் வண்ணன் * மா மணி வண்ணன் விண்ணவர் கோன் * மதுமலர்த்
தொங்கல் நீள் முடியான் * நெடியான் படி கடந்தான் **
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி * மாகம்மீது உயர்ந்து ஏறி * வான் உயர்
திங்கள் தான் அணவும் * திருக்கோட்டியூரானே 5

Pasuram 896 · corpus 1843

Pasuram 896

Study resources at Uveda
காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் * சரம் செல உய்த்து * மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் * என்னை ஆளுடை எம் பிரான் **
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க * மால் உறைகின்றது இங்கு என *
தேவர் வந்து இறைஞ்சும் * திருக்கோட்டியூரானே 6

Pasuram 897 · corpus 1844

Pasuram 897

Study resources at Uveda
கன்று கொண்டு விளங்கனி எறிந்து * ஆ நிரைக்கு அழிவு என்று * மா மழை
நின்று காத்து உகந்தான் * நில மா மகட்கு இனியான் **
குன்றின் முல்லையின் வாசமும் * குளிர் மல்லிகை மணமும் அளைந்து * இளம்
தென்றல் வந்து உலவும் * திருக்கோட்டியூரானே 7

Pasuram 898 · corpus 1845

Pasuram 898

Study resources at Uveda
பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து * அரி மாச் செகுத்து * அடியேனை ஆள் உகந்து
ஈங்கு என்னுள் புகுந்தான் * இமையோர்கள் தம் பெருமான் **
தூங்கு தண் பலவின் கனி * தொகு வாழையின் கனியொடு மாங்கனி *
தேங்கு தண் புனல் சூழ் * திருக்கோட்டியூரானே 8

Pasuram 899 · corpus 1846

Pasuram 899

Study resources at Uveda
கோவை இன் தமிழ் பாடுவார் * குடம் ஆடுவார் தட மா மலர்மிசை *
மேவும் நான்முகனில் * விளங்கு புரி நூலர் **
மேவும் நான்மறை வாணர் * ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் *
தேவ தேவபிரான் * திருக்கோட்டியூரானே 9

Pasuram 900 · corpus 1847

Pasuram 900

Study resources at Uveda
ஆலும் மா வலவன் கலிகன்றி * மங்கையர் தலைவன் * அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் * திருக்கோட்டியூரானை **
நீல மா முகில் வண்ணனை * நெடுமாலை இன் தமிழால் நினைந்த * இந்
நாலும் ஆறும் வல்லார்க்கு * இடம் ஆகும் வான் உலகே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.