Corpus pasurams 1868–1877

This page preserves the source-defined decade 10, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 921 · corpus 1868

Pasuram 921

Study resources at Uveda
ஏத்துகின்றோம் நாத் தழும்ப * இராமன் திருநாமம் *
சோத்தம் நம்பீ சுக்கிரீவா * உம்மைத் தொழுகின்றோம் **
வார்த்தை பேசீர் எம்மை * உங்கள் வானரம் கொல்லாமே *
கூத்தர் போல ஆடுகின்றோம் * குழமணிதூரமே 1

Pasuram 922 · corpus 1869

Pasuram 922

Study resources at Uveda
எம்பிரானே என்னை ஆள்வாய் * என்று என்று அலற்றாதே *
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது * இந்திரசித்து அழிந்தான் **
நம்பி அநுமா சுக்கிரீவா * அங்கதனே நளனே *
கும்பகர்ணன் பட்டுப்போனான் * குழமணிதூரமே 2

Pasuram 923 · corpus 1870

Pasuram 923

Study resources at Uveda
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் * எங்கள் இராவணற்கு *
காலன் ஆகி வந்தவா * கண்டு அஞ்சிக் கரு முகில்போல் **
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க * அங்கதன் வாழ்க என்று *
கோலம் ஆக ஆடுகின்றோம் * குழமணிதூரமே 3

Pasuram 924 · corpus 1871

Pasuram 924

Study resources at Uveda
மணங்கள் நாறும் வார் குழலார் * மாதர்கள் ஆதரத்தை *
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் * பொன்ற வரி சிலையால் **
கணங்கள் உண்ண வாளி ஆண்ட * காவலனுக்கு இளையோன் *
குணங்கள் பாடி ஆடுகின்றோம் * குழமணிதூரமே 4

Pasuram 925 · corpus 1872

Pasuram 925

Study resources at Uveda
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் * தானம் எமக்கு ஆக *
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள் * எம் பெருமான் தமர்காள் **
நின்று காணீர் கண்கள் ஆர * நீர் எம்மைக் கொல்லாதே *
குன்று போல ஆடுகின்றோம் * குழமணிதூரமே 5

Pasuram 926 · corpus 1873

Pasuram 926

Study resources at Uveda
கல்லின் முந்நீர் மாற்றி வந்து * காவல் கடந்து * இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் * எம்மை அமர்க்களத்து **
வெல்லகில்லாது அஞ்சினோம்காண் * வெம் கதிரோன் சிறுவா *
கொல்லவேண்டா ஆடுகின்றோம் * குழமணிதூரமே 6

Pasuram 927 · corpus 1874

Pasuram 927

Study resources at Uveda
மாற்றம் ஆவது இத்தனையே * வம்மின் அரக்கர் உள்ளீர் *
சீற்றம் நும்மேல் தீர வேண்டின் * சேவகம் பேசாதே **
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் * அநுமனை வாழ்க என்று *
கூற்றம் அன்னார் காண ஆடீர் * குழமணிதூரமே 7

Pasuram 928 · corpus 1875

Pasuram 928

Study resources at Uveda
கவள யானை பாய் புரவி * தேரொடு அரக்கர் எல்லாம்
துவள * வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே **
தவள மாடம் நீடு அயோத்திக் * காவலன் தன் சிறுவன் *
குவளை வண்ணன் காண ஆடீர் * குழமணிதூரமே 8

Pasuram 929 · corpus 1876

Pasuram 929

Study resources at Uveda
ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் * எங்கள் இராவணனார்
ஓடிப்போனார் * நாங்கள் எய்த்தோம் * உய்வது ஓர் காரணத்தால் **
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் * ஆணை தொடரேன்மின் *
கூடிக் கூடி ஆடுகின்றோம் * குழமணிதூரமே 9

Pasuram 930 · corpus 1877

Pasuram 930

Study resources at Uveda
வென்ற தொல் சீர்த் தென் இலங்கை * வெம் சமத்து * அன்று அரக்கர்
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த * குழமணிதூரத்தை **
கன்றி நெய்ந் நீர் நின்ற வேல் கைக் * கலியன் ஒலிமாலை *
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் * பாடிநின்று ஆடுமினே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.