This page preserves the source-defined decade 10, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
சந்த மலர்க் குழல் தாழத் * தான் உகந்து ஓடித் தனியே
வந்து * என் முலைத்தடம் தன்னை வாங்கி * நின் வாயில் மடுத்து **
நந்தன் பெறப் பெற்ற நம்பீ * நான் உகந்து உண்ணும் அமுதே *
எந்தை பெருமானே உண்ணாய் * என் அம்மம் சேமம் உண்ணாயே 1
மக்கள் பெறு தவம் போலும் * வையத்து வாழும் மடவார் *
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் * முதல்வா மதக் களிறு அன்னாய் **
செக்கர் இளம் பிறை தன்னை * வாங்கி நின் கையில் தருவன் *
ஒக்கலைமேல் இருந்து * அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் 4
பிள்ளைகள் செய்வன செய்யாய் * பேசின் பெரிதும் வலியை *
கள்ளம் மனத்தில் உடையை * காணவே தீமைகள் செய்தி **
உள்ளம் உருகி என் கொங்கை * ஓட்டந்து பாய்ந்திடுகின்ற *
பள்ளிக் குறிப்புச் செய்யாதே * பால் அமுது உண்ண நீ வாராய் 6
தன் மகன் ஆக வன் பேய்ச்சி * தான் முலை உண்ணக் கொடுக்க *
வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி * முலை உண்ட நம்பீ **
நன் மகள் ஆய்மகளோடு * நானில மங்கை மணாளா *
என் மகனே அம்மம் உண்ணாய் * என் அம்மம் சேமம் உண்ணாயே 7
உந்தம் அடிகள் முனிவர் * உன்னை நான் என் கையில் கோலால் *
நொந்திட மோதவும் கில்லேன் * நுங்கள் தம் ஆ நிரை எல்லாம் **
வந்து புகுதரும் போது * வானிடைத் தெய்வங்கள் காண *
அந்தி அம் போது அங்கு நில்லேல் * ஆழி அம் கையனே வாராய் 8
பெற்றத் தலைவன் எம் கோமான் * பேர் அருளாளன் மதலாய் *
சுற்றக் குழாத்து இளங் கோவே * தோன்றிய தொல் புகழாளா **
கற்று இனம் தோறும் மறித்துக் * கானம் திரிந்த களிறே *
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே * எம் பெருமான் இருந்தாயே 9