Corpus pasurams 2022–2031

This page preserves the source-defined decade 11, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1075 · corpus 2022

Pasuram 1075

Study resources at Uveda
மாற்றம் உள * ஆகிலும் சொல்லுவன் * மக்கள்
தோற்றக் குழி * தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம் **
ஆற்றங்கரை வாழ் மரம்போல் * அஞ்சுகின்றேன் *
நாற்றம் சுவை * ஊறு ஒலி ஆகிய நம்பீ 1

Pasuram 1076 · corpus 2023

Pasuram 1076

Study resources at Uveda
சீற்றம் உள * ஆகிலும் செப்புவன் * மக்கள்
தோற்றக் குழி * தோற்றுவிப்பாய்கொல் என்று அஞ்சி **
காற்றத்திடைப்பட்ட * கலவர் மனம்போல் *
ஆற்றத் துளங்கா நிற்பன் * ஆழி வலவா 2

Pasuram 1077 · corpus 2024

Pasuram 1077

Study resources at Uveda
தூங்கு ஆர் பிறவிக்கள் * இன்னம் புகப் பெய்து *
வாங்காய் என்று சிந்தித்து * நான் அதற்கு அஞ்சி **
பாம்போடு ஒரு கூரையிலே * பயின்றால்போல் *
தாங்காது உள்ளம் தள்ளும் * என் தமரைக்கண்ணா 3

Pasuram 1078 · corpus 2025

Pasuram 1078

Study resources at Uveda
உரு ஆர் பிறவிக்கள் * இன்னம் புகப் பெய்து *
திரிவாய் என்று சிந்தித்தி * என்று அதற்கு அஞ்சி **
இரு பாடு எரி கொள்ளியின் * உள் எறும்பேபோல் *
உருகாநிற்கும் * என் உள்ளம் ஊழி முதல்வா 4

Pasuram 1079 · corpus 2026

Pasuram 1079

Study resources at Uveda
கொள்ளக் குறையாத * இடும்பைக் குழியில் *
தள்ளிப் புகப் பெய்திகொல் * என்று அதற்கு அஞ்சி **
வெள்ளத்திடைப்பட்ட * நரி இனம்போலே *
உள்ளம் துளங்காநிற்பன் * ஊழி முதல்வா 5

Pasuram 1080 · corpus 2027

Pasuram 1080

Study resources at Uveda
படை நின்ற * பைந்தாமரையோடு * அணி நீலம்
மடை நின்று அலரும் * வயல் ஆலி மணாளா **
இடையன் எறிந்த மரமே * ஒத்து இராமே *
அடைய அருளாய் * எனக்கு உன் தன் அருளே 6

Pasuram 1081 · corpus 2028

Pasuram 1081

Study resources at Uveda
வேம்பின் புழு * வேம்பு அன்றி உண்ணாது * அடியேன்
நான் பின்னும் * உன் சேவடி அன்றி நயவேன் **
தேம்பல் இளந் திங்கள் * சிறைவிடுத்து * ஐவாய்ப்
பாம்பின் அணைப் * பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ 7

Pasuram 1082 · corpus 2029

Pasuram 1082

Study resources at Uveda
அணி ஆர் பொழில் சூழ் * அரங்க நகர் அப்பா! *
துணியேன் இனி * நின் அருள் அல்லது எனக்கு **
மணியே மணி மாணிக்கமே * மதுசூதா! *
பணியாய் எனக்கு உய்யும் வகை * பரஞ்சோதீ 8

Pasuram 1083 · corpus 2030

Pasuram 1083

Study resources at Uveda
நந்தா நரகத்து அழுந்தாவகை * நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு * இன் அருள் செய்வாய் **
சந்தோகா தலைவனே * தாமரைக் கண்ணா! *
அந்தோ அடியேற்கு * அருளாய் உன் அருளே 9

Pasuram 1084 · corpus 2031

Pasuram 1084

Study resources at Uveda
குன்றம் எடுத்து * ஆ நிரை காத்தவன் தன்னை *
மன்றில் புகழ் * மங்கை மன் கலிகன்றி சொல் **
ஒன்று நின்ற ஒன்பதும் * வல்லவர் தம்மேல் *
என்றும் வினை ஆயின * சாரகில்லாவே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.