Corpus pasurams 2012–2021

This page preserves the source-defined decade 11, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1065 · corpus 2012

Pasuram 1065

Study resources at Uveda
நீள் நாகம் சுற்றி * நெடு வரை நட்டு * ஆழ் கடலைப்
பேணான் கடைந்து * அமுதம் கொண்டு உகந்த பெம்மானை **
பூண் ஆர மார்வனைப் * புள் ஊரும் பொன் மலையை *
காணாதார் கண் என்றும் * கண் அல்ல கண்டாமே 1

Pasuram 1066 · corpus 2013

Pasuram 1066

Study resources at Uveda
நீள்வான் குறள் உரு ஆய் * நின்று இரந்து மாவலி மண் *
தாளால் அளவிட்ட * தக்கணைக்கு மிக்கானை **
தோளாத மா மணியைத் * தொண்டர்க்கு இனியானை *
கேளாச் செவிகள் * செவி அல்ல கேட்டாமே 2

Pasuram 1067 · corpus 2014

Pasuram 1067

Study resources at Uveda
தூயானைத் * தூய மறையானை * தென் ஆலி
மேயானை * மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை ** மாலை வணங்கி * அவன் பெருமை
பேசாதார் * பேச்சு என்றும் * பேச்சு அல்ல கேட்டாமே 3

Pasuram 1068 · corpus 2015

Pasuram 1068

Study resources at Uveda
கூடா இரணியனைக் * கூர் உகிரால் மார்வு இடந்த *
ஓடா அடல் அரியை * உம்பரார் கோமானை **
தோடு ஆர் நறுந் துழாய் மார்வனை * ஆர்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் * பாட்டு அல்ல கேட்டாமே 4

Pasuram 1069 · corpus 2016

Pasuram 1069

Study resources at Uveda
மை ஆர் கடலும் * மணி வரையும் மா முகிலும் *
கொய் ஆர் குவளையும் காயாவும் * போன்று இருண்ட
மெய்யானை * மெய்ய மலையானைச் * சங்கு ஏந்தும்
கையானை * கை தொழா * கை அல்ல கண்டாமே 5

Pasuram 1070 · corpus 2017

Pasuram 1070

Study resources at Uveda
கள் ஆர் துழாயும் * கணவலரும் கூவிளையும் *
முள் ஆர் முளரியும் * ஆம்பலும் முன் கண்டக்கால் **
புள் ஆய் ஓர் ஏனம் ஆய்ப் * புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று *
உள்ளாதார் உள்ளத்தை * உள்ளமாக் கொள்ளோமே 6

Pasuram 1071 · corpus 2018

Pasuram 1071

Study resources at Uveda
கனை ஆர் கடலும் * கருவிளையும் காயாவும் *
அனையானை * அன்பினால் ஆர்வத்தால் * என்றும்
சுனை ஆர் மலர் இட்டுத் * தொண்டராய் நின்று *
நினையாதார் நெஞ்சு என்றும் * நெஞ்சு அல்ல கண்டாமே 7

Pasuram 1072 · corpus 2019

Pasuram 1072

Study resources at Uveda
வெறி ஆர் கருங் கூந்தல் * ஆய்ச்சியர் வைத்த *
உறி ஆர் நறு வெண்ணெய் * தான் உகந்து உண்ட
சிறியானை ** செங் கண் நெடியானைச் * சிந்தித்து
அறியாதார் * என்றும் அறியாதார் கண்டாமே 8

Pasuram 1073 · corpus 2020

Pasuram 1073

Study resources at Uveda
தேனொடு வண்டு ஆலும் * திருமாலிருஞ்சோலை *
தான் இடமாக் கொண்டான் * தட மலர்க் கண்ணிக்காய் **
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு * ஆள் ஆனார் அல்லாதார் *
மானிடவர் அல்லர் என்று * என் மனத்தே வைத்தேனே 9

Pasuram 1074 · corpus 2021

Pasuram 1074

Study resources at Uveda
மெய்ந் நின்ற * பாவம் அகல * திருமாலைக்
கைந் நின்ற ஆழியான் * சூழும் கழல் சூடி **
கைந் நின்ற வேல் கைக் * கலியன் ஒலி மாலை *
ஐயொன்றும் ஐந்தும் * இவை பாடி ஆடுமினே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.