This page preserves the source-defined decade 2, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் * துணை முலை சாந்து கொண்டு அணியாள் *
குளம் படு குவளைக் கண் இணை எழுதாள் * கோல நல் மலர் குழற்கு அணியாள் **
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த * மால் என்னும் மால் இன மொழியாள் *
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 2
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் * தட முலைக்கு அணியிலும் தழல் ஆம் *
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் * பொரு கடல் புலம்பிலும் புலம்பும் **
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் * வளைகளும் இறை நில்லா * என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 3
ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் * ஒண் சுடர் துயின்றதால் என்னும் *
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா * தென்றலும் தீயினில் கொடிது ஆம் **
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் * சொல்லுமின் என் செய்கேன்? என்னும் *
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 4
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் * தடங் கடல் நுடங்கு எயில் இலங்கை *
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த * வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் **
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி * மென் முலை பொன் பயந்திருந்த *
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 6
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு * அழியுமால் என் உள்ளம் என்னும் *
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் * போதுமோ நீர்மலைக்கு என்னும் **
குலம் கெழு கொல்லி கோமள வல்லி * கொடி இடை நெடு மழைக் கண்ணி *
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 8
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய * எம் மாயனே அருளாய் *
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் * இடவெந்தை எந்தை பிரானை *
மன்னு மா மாட மங்கையர் தலைவன் * மானவேல் கலியன் வாய் ஒலிகள் *
பன்னிய பனுவல் பாடுவார் * நாளும் பழவினை பற்று அறுப்பாரே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.