Pasuram 151 · corpus 1098
Pasuram 151
நண்ணாத வாள் அவுணர் * இடைப் புக்கு வானவரைப்
பெண் ஆகி * அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லைத் * தலசயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை * இறைப் பொழுதும் எண்ணோமே 1
Thirumangai Azhwar · Pasurams 151–160
Corpus pasurams 1098–1107
This page preserves the source-defined decade 2, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 151 · corpus 1098
நண்ணாத வாள் அவுணர் * இடைப் புக்கு வானவரைப்
பெண் ஆகி * அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லைத் * தலசயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை * இறைப் பொழுதும் எண்ணோமே 1
Pasuram 152 · corpus 1099
பார் வண்ண மட மங்கை * பனி நல் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வத்தில் * இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்
கார்வண்ண முது முந்நீர்க் * கடல்மல்லைத் தலசயனம்
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் * அவர் எம்மை ஆள்வாரே 2
Pasuram 153 · corpus 1100
ஏனத்தின் உருவு ஆகி * நில மங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர் முறையால் * மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள **
கானத்தின் கடல்மல்லைத் * தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை * நினைவார் என் நாயகரே 3
Pasuram 154 · corpus 1101
விண்டாரை வென்று ஆவி * விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் * அழல் ஏற வெம் சமத்துக்
கண்டாரை கடல்மல்லைத் * தலசயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சு உடையார் * அவர் எங்கள் குலதெய்வமே 4
Pasuram 155 · corpus 1102
பிச்சச் சிறு பீலிச் * சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக்கு இறை என்னும் * அவ் இறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவன் ஊர் * கடல்மல்லைத் தலசயனம்
நச்சித் தொழுவாரை * நச்சு என் தன் நல் நெஞ்சே 5
Pasuram 156 · corpus 1103
புலன் கொள் நிதிக் குவையோடு * புழைக் கை மா களிற்று இனமும்
நலம் கொள் நவமணிக் குவையும் * சுமந்து எங்கும் நான்று ஒசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக் * கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தார் அவரை * வலங்கொள் என் மட நெஞ்சே 6
Pasuram 157 · corpus 1104
பஞ்சிச் சிறு கூழை * உரு ஆகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட * அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவன் ஊர் * கடல்மல்லைத் தலசயனம்
நெஞ்சில் தொழுவாரைத் * தொழுவாய் என் தூய் நெஞ்சே 7
Pasuram 158 · corpus 1105
செழு நீர் மலர்க் கமலம் * திரை உந்து வன் பகட்டால்
உழும் நீர் வயல் உழவர் உழப் * பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் * கடல்மல்லைத் தலசயனம்
தொழும் நீர் மனத்தவரைத் * தொழுவாய் என் தூய் நெஞ்சே 8
Pasuram 159 · corpus 1106
பிணங்கள் இடு காடு அதனுள் * நடம் ஆடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து * எம் பெருமானார்க்கு இடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் * கடல்மல்லைத் தலசயனம்
வணங்கும் மனத்தார் அவரை * வணங்கு என் தன் மட நெஞ்சே 9
Pasuram 160 · corpus 1107
கடி கமழும் நெடு மறுகின் * கடல்மல்லைத் தலசயனத்து
அடிகள் அடியே நினையும் * அடியவர்கள் தம் அடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் * கலிகன்றி ஒலி வல்லார்
முடி கொள் நெடு மன்னவர் தம் * முதல்வர் முதல் ஆவாரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.