This page preserves the source-defined decade 2, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்ச் *
சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய் *
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு *
இடம் தான் தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
பல்லவன் வில்லவன் என்று உலகில் *
பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் * மல்லையர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 1 **
தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின் *
துயர் தீர்த்து அரவம் வெருவ * முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு *
இடம் தான் தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத் *
திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற *
பாம்பு உடைப் பல்லவர் கோன் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 5 **
திண் படைக் கோளரியின் உரு ஆய்த் *
திறலோன் அகலம் செருவில் முன நாள் *
புண் படப் போழ்ந்த பிரானது இடம் *
பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப *
விடை வெல் கொடி வேல் படை முன் உயர்த்த *
பண்பு உடைப் பல்லவர் கோன் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 6 **
இலகிய நீள் முடி மாவலி தன் *
பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள் *
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு *
இடம் தான் தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
உலகு உடை மன்னவன் தென்னவனைக் *
கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ *
பல படை சாய வென்றான் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 7 **
பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து * முன்னே
ஒருகால் செருவில் உருமின் *
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு * இடம் தான்
தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
கறை உடை வாள் மற மன்னர் கெடக் *
கடல்போல முழங்கும் குரல் கடுவாய் *
பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 9 **
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர் கோன்
பணிந்த * பரமேச்சுரவிண்ணகர்மேல் *
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் *
கலிகன்றி குன்றாது உரைத்த **
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் *
திரு மா மகள் தன் அருளால் * உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் *
செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே 10 **
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.