This page preserves the source-defined decade 2, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் *
வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் *
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர் * இளந் தளிரில்
கண்வளர்ந்த ஈசன் தன்னை *
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் *
தூய நான்மறையாளர் சோமுச் செய்ய *
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் *
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 1 **
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம் *
தீபம் கொண்டு அமரர் தொழப் பணம் கொள் பாம்பில் *
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை *
தாம் இருவர் அடி வருடும் தன்மையானை **
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் * ஐந்து
வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும் *
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் * செல்வத்
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 2 **
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து *
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை *
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் *
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை **
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக் *
குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு *
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த *
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 4 **
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி *
கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள் *
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் *
பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை **
மறை வளரப் புகழ் வளர மாடம்தோறும் *
மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத *
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் *
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 5 **
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று * அங்கு
உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க *
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று *
தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை **
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு *
வியன் கலை எண் தோளினாள் விளங்கு * செல்வச்
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் *
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 6 **
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு *
சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற *
காவடிவின் கற்பகமே போல நின்று *
கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை **
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை *
செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை *
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு *
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே 9 **
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை * நீல
மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை *
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த * செல்வத்
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்று **
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் *
வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார் *
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் *
கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே 10 **
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.