This page preserves the source-defined decade 3, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
இருந் தண் மா நிலம் ஏனம் அது ஆய் *
வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி *
கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் *
கமல நல் மலர்த் தேறல்
அருந்தி ** இன் இசை முரன்று எழும் அளி குலம்
பொதுளி * அம் பொழிலூடே *
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு *
திருவயிந்திரபுரமே 1 **
மின்னும் ஆழி அங்கையவன் * செய்யவள்
உறை தரு திரு மார்பன் *
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய *
பரன் இடம் வரைச் சாரல் **
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வரப் *
பிணி அவிழ் கமலத்து *
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு *
திருவயிந்திரபுரமே 2 **
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் *
மார்பு அகம் இரு பிளவா *
கூறு கொண்டு அவன் குலமகற்கு * இன் அருள்
கொடுத்தவன் இடம் ** மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை *
விசும்பு உற மணி நீழல் *
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ் *
திருவயிந்திரபுரமே 4 **
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று *
அகல் இடம் அளந்து * ஆயர்
பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் *
பொன் மலர் திகழ் ** வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் * குதிகொடு
குரக்கினம் இரைத்து ஓடி *
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு *
திருவயிந்திரபுரமே 5 **
கூன் உலாவிய மடந்தை தன் * கொடுஞ் சொலின்
திறத்து இளங் கொடியோடும் *
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன்
இடம் * கவின் ஆரும் **
வான் உலாவிய மதி தவழ் மால் வரை *
மா மதிள் புடை சூழ *
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய *
திருவயிந்திரபுரமே 6 **
மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம் *
விலங்கலின்மிசை இலங்கை
மன்னன் * நீள் முடி பொடிசெய்த மைந்தனது
இடம் * மணி வரை நீழல் **
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் *
பெடையொடும் இனிது அமர *
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு * தண்
திருவயிந்திரபுரமே 7 **
விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம் *
வில் இறுத்து * அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் *
நிலவிய இடம் தடம் ஆர் **
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு *
மலை வளர் அகில் உந்தி *
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு *
திருவயிந்திரபுரமே 8 **
மூவர் ஆகிய ஒருவனை * மூவுலகு
உண்டு உமிழ்ந்து அளந்தானை *
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் * தண்
திருவயிந்திரபுரத்து **
மேவு சோதியை வேல் வலவன் * கலி
கன்றி விரித்து உரைத்த *
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப் *
பாவங்கள் பயிலாவே 10 **
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.