Corpus pasurams 1168–1177

This page preserves the source-defined decade 3, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 221 · corpus 1168

Pasuram 221

Study resources at Uveda
வாட மருது இடை போகி * மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு *
ஆடல் நல் மா உடைத்து * ஆயர் ஆ நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் **
கூடிய மா மழை காத்த * கூத்தன் என வருகின்றான் *
சேடு உயர் பூம் பொழில் தில்லைச் * சித்திரகூடத்து உள்ளானே 1 **

Pasuram 222 · corpus 1169

Pasuram 222

Study resources at Uveda
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட * பிள்ளை பரிசு இது என்றால் *
மா நில மா மகள் * மாதர் கேள்வன் இவன் என்றும் ** வண்டு உண்
பூ மகள் நாயகன் என்றும் * புலன் கெழு கோவியர் பாடி *
தே மலர் தூவ வருவான் * சித்திரகூடத்து உள்ளானே 2 **

Pasuram 223 · corpus 1170

Pasuram 223

Study resources at Uveda
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று * ஆய்ச்சியர் கூடி இழிப்ப *
எண் திசையோரும் வணங்க * இணை மருது ஊடு நடந்திட்டு **
அண்டரும் வானத்தவரும் * ஆயிரம் நாமங்களோடு *
திண் திறல் பாட வருவான் * சித்திரகூடத்து உள்ளானே 3 **

Pasuram 224 · corpus 1171

Pasuram 224

Study resources at Uveda
வளைக் கை நெடுங்கண் மடவார் * ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப *
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் * தண் தடம் புக்கு அண்டர் காண **
முளைத்த எயிற்று அழல் நாகத்து * உச்சியில் நின்று அது வாட *
திளைத்து அமர் செய்து வருவான் * சித்திரகூடத்து உள்ளானே 4 **

Pasuram 225 · corpus 1172

Pasuram 225

Study resources at Uveda
பருவக் கரு முகில் ஒத்து * முத்து உடை மா கடல் ஒத்து *
அருவித் திரள் திகழ்கின்ற * ஆயிரம் பொன்மலை ஒத்து **
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து * இன மால் விடை செற்று *
தெருவில் திளைத்து வருவான் * சித்திரகூடத்து உள்ளானே 5 **

Pasuram 226 · corpus 1173

Pasuram 226

Study resources at Uveda
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க * வரு மழை காப்பான் *
உய்யப் பரு வரை தாங்கி * ஆநிரை காத்தான் என்று ஏத்தி **
வையத்து எவரும் வணங்க * அணங்கு எழு மா மலை போல *
தெய்வப் புள் ஏறி வருவான் * சித்திரகூடத்து உள்ளானே 6 **

Pasuram 227 · corpus 1174

Pasuram 227

Study resources at Uveda
ஆவர் இவை செய்து அறிவார்? * அஞ்சன மா மலை போல *
மேவு சினத்து அடல் வேழம் * வீழ முனிந்து * அழகு ஆய
காவி மலர் நெடுங் கண்ணார் * கை தொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லைச் * சித்திரகூடத்து உள்ளானே 7 **

Pasuram 228 · corpus 1175

Pasuram 228

Study resources at Uveda
பொங்கி அமரில் ஒருகால் * பொன்பெயரோனை வெருவ *
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு * ஆயிரம் தோள் எழுந்து ஆட **
பைங் கண் இரண்டு எரி கான்ற * நீண்ட எயிற்றொடு பேழ் வாய் *
சிங்க உருவின் வருவான் * சித்திரகூடத்து உள்ளானே 8

Pasuram 229 · corpus 1176

Pasuram 229

Study resources at Uveda
கரு முகில் போல்வது ஓர் மேனி * கையன ஆழியும் சங்கும் *
பெரு விறல் வானவர் சூழ * ஏழ் உலகும் தொழுது ஏத்த **
ஒரு மகள் ஆயர் மடந்தை * ஒருத்தி நிலமகள் * மற்றைத்
திருமகளோடும் வருவான் * சித்திரகூடத்து உள்ளானே 9 **

Pasuram 230 · corpus 1177

Pasuram 230

Study resources at Uveda
தேன் அமர் பூம் பொழில் தில்லைச் * சித்திரகூடம் அமர்ந்த *
வானவர் தங்கள் பிரானை * மங்கையர் கோன்மருவார் **
ஊன் அமர் வேல் கலிகன்றி * ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் *
தான் இவை கற்று வல்லார்மேல் * சாரா தீவினை தானே 10 **

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.