Corpus pasurams 1178–1187

This page preserves the source-defined decade 3, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 231 · corpus 1178

Pasuram 231

Study resources at Uveda
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி * உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் *
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த * தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி **
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் * அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் *
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் * காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே 1 **

Pasuram 232 · corpus 1179

Pasuram 232

Study resources at Uveda
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை * நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன் *
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை * ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச் **
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத் * தொல் குருகு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும் *
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் * காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே 2 **

Pasuram 233 · corpus 1180

Pasuram 233

Study resources at Uveda
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய் * மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து *
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் * நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு **
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் * மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் *
செய் அணைந்து களை களையாது ஏறும் * காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே 3 **

Pasuram 234 · corpus 1181

Pasuram 234

Study resources at Uveda
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள் * பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் *
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட * நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத் **
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே * தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால் *
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் * காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே 4 **

Pasuram 235 · corpus 1182

Pasuram 235

Study resources at Uveda
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு * திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து *
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட * விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் **
அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட * அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் *
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் * காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே 5 **

Pasuram 236 · corpus 1183

Pasuram 236

Study resources at Uveda
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் * படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை *
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த * விண்ணவர் கோன் தாள் அணைவீர் வெற்புப்போலும் **
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் * துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால் *
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் * காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே 6 **

Pasuram 237 · corpus 1184

Pasuram 237

Study resources at Uveda
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் * புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த *
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் * திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி **
மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி * வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி *
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் * காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே 7 **

Pasuram 238 · corpus 1185

Pasuram 238

Study resources at Uveda
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய் * பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல் *
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவில் * மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ **
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ * நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத் *
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் * காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே 8 **

Pasuram 239 · corpus 1186

Pasuram 239

Study resources at Uveda
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் * பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து *
கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில் * கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடித் **
துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத் * தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி *
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் * காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே 9 **

Pasuram 240 · corpus 1187

Pasuram 240

Study resources at Uveda
செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச் * சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை *
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் * அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் **
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் * கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன *
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் * தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே 10 **

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.