This page preserves the source-defined decade 9, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய *
வாள் அரவின் அணை மேவி *
சங்கம் ஆர் அம் கைத் தட மலர் உந்தித் *
சாம மா மேனி என் தலைவன் **
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் *
அருங் கலை பயின்று * எரி மூன்றும்
செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் *
திருக்கண்ணங்குடியுள் நின்றானே 1
வாதை வந்து அடர வானமும் நிலனும் *
மலைகளும் அலை கடல் குளிப்ப *
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி *
விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன் **
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் *
புது விரை மது மலர் அணைந்து *
சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும் *
திருக்கண்ணங்குடியுள் நின்றானே 3
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி *
வெள் எயிற்று ஒள் எரித் தறு கண் *
பன்றி ஆய் அன்று பார் மகள் பயலை *
தீர்த்தவன் பஞ்சவர் பாகன் **
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து *
உயர் கொடி ஒளி வளர் மதியம் *
சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத் *
திருக்கண்ணங்குடியுள் நின்றானே 4
வான் உளார் அவரை வலிமையால் நலியும் *
மறி கடல் இலங்கையார் கோனை *
பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப் *
பரு முடி உதிர வில் வளைத்தோன் **
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆடக் *
கண முகில் முரசம் நின்று அதிர *
தேன் உலா வரி வண்டு இன் இசை முரலும் *
திருக்கண்ணங்குடியுள் நின்றானே 7
கலை உலா அல்குல் காரிகைதிறத்துக் *
கடல் பெரும் படையொடும் சென்று *
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற *
திருக்கண்ணங்குடியுள் நின்றானை **
மலை குலாம் மாட மங்கையர் தலைவன் *
மான வேல் கலியன் வாய் ஒலிகள் *
உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும் *
வல்லவர்க்கு இல்லை நல்குரவே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.