Corpus pasurams 1738–1747

This page preserves the source-defined decade 8, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 791 · corpus 1738

Pasuram 791

Study resources at Uveda
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை * மண நோக்கம்
உண்டானே! * உன்னை உகந்து உகந்து * உன் தனக்கே
தொண்டு ஆனேற்கு ** என் செய்கின்றாய்? சொல்லு * நால்வேதம்
கண்டானே * கண்ணபுரத்து உறை அம்மானே 1

Pasuram 792 · corpus 1739

Pasuram 792

Study resources at Uveda
பெரு நீரும் விண்ணும் * மலையும் உலகு ஏழும் *
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய * நின்னை அல்லால் **
வரு தேவர் மற்று உளர் என்று * என் மனத்து இறையும்
கருதேன் நான் * கண்ணபுரத்து உறை அம்மானே 2

Pasuram 793 · corpus 1740

Pasuram 793

Study resources at Uveda
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று * இருப்பாரோடு
உற்றிலேன் * உற்றதும் * உன் அடியார்க்கு அடிமை **
மற்று எல்லாம் பேசிலும் * நின் திரு எட்டு எழுத்தும்
கற்று * நான் கண்ணபுரத்து உறை அம்மானே 3

Pasuram 794 · corpus 1741

Pasuram 794

Study resources at Uveda
பெண் ஆனாள் * பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல் *
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை * உகந்தேன் நான் **
மண் ஆளா வாள் நெடுங் கண்ணி * மது மலராள்
கண்ணாளா * கண்ணபுரத்து உறை அம்மானே 4

Pasuram 795 · corpus 1742

Pasuram 795

Study resources at Uveda
பெற்றாரும் சுற்றமும் * என்று இவை பேணேன் நான் *
மற்று ஆரும் பற்று இலேன் * ஆதலால் நின் அடைந்தேன் **
உற்றான் என்று உள்ளத்து வைத்து * அருள்செய் கண்டாய் *
கற்றார் சேர் * கண்ணபுரத்து உறை அம்மானே 5

Pasuram 796 · corpus 1743

Pasuram 796

Study resources at Uveda
ஏத்தி உன் சேவடி * எண்ணி இருப்பாரை *
பார்த்திருந்து அங்கு * நமன் தமர் பற்றாது **
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று * தொடாமை நீ
காத்திபோல் * கண்ணபுரத்து உறை அம்மானே 6

Pasuram 797 · corpus 1744

Pasuram 797

Study resources at Uveda
வெள்ளை நீர் வெள்ளத்து * அணைந்த அரவு அணைமேல் *
துள்ளு நீர் மெள்ளத் * துயின்ற பெருமானே **
வள்ளலே உன் தமர்க்கு என்றும் * நமன்தமர்
கள்ளர்போல் * கண்ணபுரத்து உறை அம்மானே 7

Pasuram 798 · corpus 1745

Pasuram 798

Study resources at Uveda
மாண் ஆகி * வையம் அளந்ததுவும் வாள் அவுணன் *
பூண் ஆகம் கீண்டதுவும் * ஈண்டு நினைந்து இருந்தேன் **
பேணாத வல்வினையேன் * இடர் எத்தனையும்
காணேன் நான் * கண்ணபுரத்து உறை அம்மானே 8

Pasuram 799 · corpus 1746

Pasuram 799

Study resources at Uveda
நாட்டினாய் என்னை * உனக்கு முன் தொண்டு ஆக *
மாட்டினேன் அத்தனையே கொண்டு * என் வல்வினையை **
பாட்டினால் உன்னை * என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் * கண்ணபுரத்து உறை அம்மானே 9

Pasuram 800 · corpus 1747

Pasuram 800

Study resources at Uveda
கண்ட சீர்க் * கண்ணபுரத்து உறை அம்மானை *
கொண்ட சீர்த் தொண்டன் * கலியன் ஒலி மாலை **
பண்டமாய்ப் பாடும் * அடியவர்க்கு எஞ்ஞான்றும் *
அண்டம் போய் ஆட்சி * அவர்க்கு அது அறிந்தோமே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.