Pasuram 821 · corpus 1768
Pasuram 821
தன்னை நைவிக்கிலேன் * வல் வினையேன் தொழுதும் எழு *
பொன்னை நைவிக்கும் * அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய் **
என்னை நைவித்து * எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் *
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து * அழகு ஆய புல்லாணியே 1
Thirumangai Azhwar · Pasurams 821–830
Corpus pasurams 1768–1777
This page preserves the source-defined decade 9, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 821 · corpus 1768
தன்னை நைவிக்கிலேன் * வல் வினையேன் தொழுதும் எழு *
பொன்னை நைவிக்கும் * அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய் **
என்னை நைவித்து * எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் *
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து * அழகு ஆய புல்லாணியே 1
Pasuram 822 · corpus 1769
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? * தொழுதும் எழு *
முருகு வண்டு உண் மலர்க் கைதையின் * நீழலில் முன் ஒருநாள் **
பெருகு காதன்மை என் உள்ளம் * எய்தப் பிரிந்தான் இடம் *
பொருது முந்நீர்க் கரைக்கே * மணி உந்து புல்லாணியே 2
Pasuram 823 · corpus 1770
ஏது செய்தால் மறக்கேன்? * மனமே தொழுதும் எழு *
தாது மல்கு தடம் சூழ் பொழில் * தாழ்வர் தொடர்ந்து ** பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி * என்று அகன்றான் இடம் *
போது நாளும் கமழும் * பொழில் சூழ்ந்த புல்லாணியே 3
Pasuram 824 · corpus 1771
கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் * கொடியேற்கு * முன்
நங்கள் ஈசன் * நமக்கே பணித்த மொழி செய்திலன் **
மங்கை நல்லாய் தொழுதும் எழு * போய் அவன் மன்னும் ஊர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே * மணி உந்து புல்லாணியே 4
Pasuram 825 · corpus 1772
உணரில் உள்ளம் சுடுமால் * வினையேன் தொழுதும் எழு *
துணரி ஞாழல் நறும் போது * நம் சூழ் குழல் பெய்து ** பின்
தணரில் ஆவி தளரும் என * அன்பு தந்தான் இடம் *
புணரி ஓதம் பணில * மணி உந்து புல்லாணியே 5
Pasuram 826 · corpus 1773
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? * தொழுதும் எழு *
வள்ளல் மாயன் * மணிவண்ணன் எம்மான் மருவும் இடம் **
கள் அவிழும் மலர்க் காவியும் * தூ மடல் கைதையும் *
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த * புல்லாணியே 6
Pasuram 827 · corpus 1774
பரவி நெஞ்சே தொழுதும் எழு * போய் அவன் பாலம் ஆய் *
இரவும் நாளும் இனி கண் துயிலாது * இருந்து என் பயன்? **
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு * வெண் திரை *
புரவி என்னப் புதம்செய்து * வந்து உந்து புல்லாணியே 7
Pasuram 828 · corpus 1775
அலமும் ஆழிப் படையும் உடையார் * நமக்கு அன்பர் ஆய் *
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் * நாம் தொழுதும் எழு **
உலவு கால் நல் கழி ஓங்கு * தண் பைம் பொழிலூடு * இசை
புலவு கானல் * களி வண்டு இனம் பாடு புல்லாணியே 8
Pasuram 829 · corpus 1776
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் * ஒளி மா மலர் *
பாதம் நாளும் பணிவோம் * நமக்கே நலம் ஆதலின் **
ஆது தாரான் எனிலும் தரும் * அன்றியும் அன்பர் ஆய் *
போதும் மாதே தொழுதும் * அவன் மன்னு புல்லாணியே 9
Pasuram 830 · corpus 1777
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் * எழில் தாமரை *
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த * அழகு ஆய புல்லாணிமேல் *
கலங்கல் இல்லாப் புகழான் * கலியன் ஒலிமாலை *
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது * பாடு இல் வைகுந்தமே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.