Pasuram 831 · corpus 1778
Pasuram 831
கா ஆர் மடல் பெண்ணை * அன்றில் அரிகுரலும் *
ஏ வாயினூடு இயங்கும் * எஃகின் கொடிதாலோ **
பூ ஆர் மணம் கமழும் * புல்லாணி கைதொழுதேன் *
பாவாய் இது நமக்கு ஓர் * பான்மையே ஆகாதே? 1
Thirumangai Azhwar · Pasurams 831–840
Corpus pasurams 1778–1787
This page preserves the source-defined decade 9, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 831 · corpus 1778
கா ஆர் மடல் பெண்ணை * அன்றில் அரிகுரலும் *
ஏ வாயினூடு இயங்கும் * எஃகின் கொடிதாலோ **
பூ ஆர் மணம் கமழும் * புல்லாணி கைதொழுதேன் *
பாவாய் இது நமக்கு ஓர் * பான்மையே ஆகாதே? 1
Pasuram 832 · corpus 1779
முன்னம் குறள் உரு ஆய் * மூவடி மண் கொண்டு அளந்த *
மன்னன் சரிதைக்கே * மால் ஆகி பொன் பயந்தேன் **
பொன்னம் கழிக் கானல் * புள் இனங்காள் புல்லாணி *
அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு * ஆங்கு இதனைச் செப்புமினே 2
Pasuram 833 · corpus 1780
வவ்வித் துழாய் அதன்மேல் * சென்ற தனி நெஞ்சம் *
செவ்வி அறியாது * நிற்கும்கொல்? நித்திலங்கள் **
பவ்வத் திரை உலவு * புல்லாணி கைதொழுதேன் *
தெய்வச் சிலையாற்கு * என் சிந்தை நோய் செப்புமினே 3
Pasuram 834 · corpus 1781
பரிய இரணியனது ஆகம் * அணி உகிரால் *
அரி உரு ஆய்க் கீண்டான் * அருள் தந்தவா நமக்கு **
பொரு திரைகள் போந்து உலவு * புல்லாணி கைதொழுதேன் *
அரி மலர்க் கண் நீர் ததும்ப * அம் துகிலும் நில்லாவே 4
Pasuram 835 · corpus 1782
வில்லால் இலங்கை மலங்கச் * சரம் துரந்த *
வல்லாளன் பின் போன * நெஞ்சம் வரும் அளவும் **
எல்லாரும் என் தன்னை * ஏசிலும் பேசிடினும் *
புல்லாணி எம் பெருமான் * பொய் கேட்டு இருந்தேனே 5
Pasuram 836 · corpus 1783
சுழன்று இலங்கு வெம் கதிரோன் * தேரோடும் போய் மறைந்தான் *
அழன்று கொடிது ஆகி * அம் சுடரில் தான் அடுமால் **
செழுந் தடம் பூஞ்சோலை சூழ் * புல்லாணி கைதொழுதேன் *
இழந்திருந்தேன் என் தன் * எழில் நிறமும் சங்குமே 6
Pasuram 837 · corpus 1784
கனை ஆர் இடி குரலின் * கார் மணியின் நா ஆடல் *
தினையேனும் நில்லாது * தீயில் கொடிதாலோ **
புனை ஆர் மணி மாடப் * புல்லாணி கைதொழுதேன் *
வினையேன்மேல் வேலையும் * வெம் தழலே வீசுமே 7
Pasuram 838 · corpus 1785
தூம்பு உடைக் கை வேழம் * வெருவ மருப்பு ஒசித்த *
பாம்பின் அணையான் * அருள்தந்தவா நமக்கு **
பூஞ் செருந்தி பொன் சொரியும் * புல்லாணி கைதொழுதேன் *
தேம்பல் இளம் பிறையும் * என் தனக்கு ஓர் வெம் தழலே 8
Pasuram 839 · corpus 1786
வேதமும் வேள்வியும் * விண்ணும் இரு சுடரும் *
ஆதியும் ஆனான் * அருள்தந்தவா நமக்கு **
போது அலரும் புன்னை சூழ் * புல்லாணி கைதொழுதேன் *
ஓதமும் நானும் * உறங்காது இருந்தேனே 9
Pasuram 840 · corpus 1787
பொன் அலரும் புன்னை சூழ் * புல்லாணி அம்மானை *
மின் இடையார் வேட்கை நோய் கூர * இருந்ததனை **
கல் நவிலும் திண் தோள் * கலியன் ஒலிவல்லார் *
மன்னவர் ஆய் மண் ஆண்டு * வான் நாடும் முன்னுவரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.